/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வல்லவர்களாக வாழ நல்ல குறிக்கோள் தேவை'
/
'வல்லவர்களாக வாழ நல்ல குறிக்கோள் தேவை'
ADDED : ஜன 12, 2025 11:28 PM

கோவை; கோவை அரசு கலைக் கல்லுாரியில், 2020 - 23 ஆண்டுகளில் பயின்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. 1,513 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில் பல்கலை அளவில் தரமதிப்பீடு பெற்ற, 62 மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
முன்னாள் கல்லுாரி கல்வி இயக்குனர் குமாரசாமி பேசுகையில், ''மாணவர்கள், பெற்றோர் செய்த தியாகங்களை நினைத்து பார்க்க வேண்டும். கற்ற கல்வி, ஆயுள் இறுதி வரை வரும். அறநெறி சார்ந்த கல்வி தான் சிறந்தது. வல்லவர்களாக வாழ நல்ல குறிக்கோள்களை கொண்டிருக்க வேண்டும். மனிதநேயத்தோடு கூடிய சிந்தனைகளை உடையவர்கள் தான், மனிதனாக இருக்க முடியும்,'' என்றார்.
கல்லுாரி முதல்வர் எழிலி, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.