/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்'
/
'மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்'
ADDED : ஜன 16, 2024 10:35 PM

மேட்டுப்பாளையம்:மற்றவர்களுக்கு, ஏதாவது சேவைகள் செய்து வாழ வேண்டும், என, எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி தாளாளர் மணிமேகலை மோகன் பேசினார்.
காரமடை அருகே கண்ணார்பாளையத்தில் உள்ள, சாரதாம்பாள் கோவிலில், தைப்பொங்கலை முன்னிட்டு, திருவிளக்கு வழிபாடு நடந்தது. விழாவுக்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி தாளாளர் மணிமேகலை மோகன் திருவிளக்கு வழிபாடு பூஜையை துவக்கி வைத்து பேசுகையில், பெண்கள் கோபம், கவலை ஆகிய இரண்டையும், மனதில் இருந்து அகற்ற வேண்டும்.
அன்பு அமைதியோடு அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். உயிரினங்களிலேயே உன்னதமான படைப்பு மனிதன். நாம் ஒழுக்கம், பண்பாட்டுடன் மற்றவர்களுக்கு, ஏதாவது சேவைகள் செய்து வாழ வேண்டும், என்றார்.
காரமடை நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ், குருஜி சிவாத்மா உள்பட நூற்றுக்கு ம் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை தலைவர் நஞ்சப்பன், செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

