தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்கள் மனசு : விஜய் மீது நம்பிக்கை

மக்கள் மனசு : விஜய் மீது நம்பிக்கை

மக்கள் மனசு : விஜய் மீது நம்பிக்கை


UPDATED : மே 10, 2026 06:14 PM

ADDED : மே 10, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 06:14 PM ADDED : மே 10, 2026 06:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதல்வர் விஜய்யின் 3 அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். குடிப்பழக்கம் அதிகரித்திருப்பதால் பல வீடுகளில் தினமும் தகராறு நடக்கிறது. மதுக்கடைகளை மூட வேண்டும். பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள், போதை பொருள் கலாசாரத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும். ஏழைகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும். விஜய் மூலம் மக்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

-துர்கா தேவி, புலியகுளம்

தனிப்படை வெரிகுட் போதை பொருட்களின் புழக்கத்தால் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இளைஞர்கள் சீரழிவதுடன், பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. பதவி ஏற்ற உடனே இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனிப்படை அறிவிப்பு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. நிச்சயம் சாமான்ய மக்களுக்கு அவர் துணை நிற்பார் என்ற நம்பிக்கை உள்ளது. -கண்ணன், மலுமிச்சம்பட்டி.


நல்லாட்சி தருவார் முதல்வரின் முதல் அறிவிப்பே தமிழ்நாட்டின் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளது. போதை ஒழிப்புக்கும், பெண்களை பாதுகாக்கவும் தனிப்படை என்பது காலத்தின் தேவை. அதேபோல், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அறிவிப்புகளை எதிர்பார்த்துள்ளோம். பொருளாதார சுமைகளையும் கடந்து விஜய் சாதிப்பார்; நல்லாட்சி தருவார். -ஜெகதீஸ், ஒண்டிப்புதுார்.


நல்லது செய்வார் விஜய்யின் முதல் அறிவிப்புகள் அவசியமானவை. பெண்கள் பாதுகாப்புக்காக போதை பழக்கத்தை ஒழிக்க முதல் அறிவிப்பாக வெளியிட்டதில் மகிழ்ச்சி. கடந்த ஆட்சியாளர்கள் நடுத்தர மக்களை ஓட்டாக மட்டுமே பார்த்தனர். அவர்களால் நடுத்தர மக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சற்று தாமதமானாலும் விஜய் அதை செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. --சுரேஷ், சிங்காநல்லூர்


அம்மாவின் மகிழ்ச்சி பள்ளி, கல்லுாரிகளுக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு, பெற்றோர் படும் அவதியை வார்த்தைகளால் விளக்க முடியாது. போதைப்பொருள் பயன்படுத்தும் வீடியோக்களை பார்க்கும் போது பயமாக இருக்கிறது. முதல்வராக பதவியேற்றதும் போதையை ஒழிக்கவும், பெண்களை பாதுகாக்கவும் தனிப்படை அமைப்பதாக கூறியிருப்பதை வரவேற்கிறேன். ஒரு அம்மாவாக இந்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. - கே.காஞ்சனா, சங்கனுார்.


ஆக்கப்பூர்வ நடவடிக்கை சிறப்பு படை அமைப்பது சிறந்த நடவடிக்கை. பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் அரசு ஊழியராக இருந்தால், பதவியை பறிக்க வேண்டும். தனிப்படை அமைத்து, மாவட்ட வாரியாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும். பதவியேற்ற நாளே இதற்கு தனிகவனம் செலுத்தியிருப்பது ஆக்கப்பூர்வ முன்னெடுப்பாக பார்க்கிறேன். - ஆர்.வேலுமணி, காந்திபார்க்.


அவகாசம் கொடுப்போம் முதல்வராக விஜய் பதவியேற்றவுடன் போதை ஒழிப்பு, மின்சார கட்டண சலுகை போன்ற மூன்று திட்டங்களுக்கு முதல் கையெழுத்திட்டுள்ளார். அவர் அறிவித்த மற்ற திட்டங்களை எப்படி நிறைவேற்ற போகிறார் என்பது தெரியவில்லை. மற்ற திட்டங்களை நிறைவேற்ற அவகாசம் கேட்டுள்ளார். என்ன செய்ய போகிறார், என்ன மாற்றம் கொண்டு வரப்போகிறார் என்று அவகாசம் கொடுத்து பார்ப்போம். - கஜலட்சுமி, சுந்தராபுரம்


எதிர்பார்த்தது கிடைக்கவில்லை விஜய் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளார். அரசு நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லாதவர். ஆட்சிக்கு வந்து என்ன செய்கிறார் என்று பிறகு தான் பார்க்க வேண்டும். பெண்களுக்கு 2,500 ரூபாய் உரிமை தொகை, இலவச பஸ் பயணம் திட்டத்தில் முதல் கையெழுத்து போடுவார் என்று எதிர்பார்த்தோம். கையெழுத்திடாதது ஏமாற்றம் அளிக்கிறது. -- மயிலாத்தாள், வேலந்தாவளம்


அரசாணைக்கு வரவேற்பு தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, முதல்வர் ஆனதும், உடனடியாக பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருட்களை தடுக்கவும் அரசாணை வெளியிட்டது வரவேற்கத்தக்கது. கொடுத்த வாக்குறுதியை முதல் நாளே நிறைவேற்ற துவங்கியுள்ளதால், மக்களின் பிற தேவைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. - சினேகா, தொண்டாமுத்தூர்.


வாக்குறுதி நிறைவேற்றுகிறார் பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசாணையில் கையெழுத்திட்டது, புது நம்பிக்கை தந்துள்ளது. மற்ற அரசியல்வாதிகளை போல பொய் சொல்லாமல், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதும், அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்தும், நேரடியாக பேசியதால், மக்களின் பிற தேவைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. - திலகா, தொண்டாமுத்தூர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us