ADDED : ஜூன் 01, 2026 08:55 AM
அ நிறம் | அளவு
சின்னதடாகம்: உலக புகையிலை பொருட்கள் எதிர்ப்பு தினத்தையொட்டி, சின்ன தடாகம் 46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில், சின்னதடாகம் பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி, புகையிலையின் தீமைகள் குறித்து விளக்கினார். தேசிய, சர்வதேச அளவில் சாதித்த விளையாட்டு வீரர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. புகையிலையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
