/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலை இல்லாத சமுதாயம்; செவிலியர் கல்லுாரி உறுதிமொழி
/
புகையிலை இல்லாத சமுதாயம்; செவிலியர் கல்லுாரி உறுதிமொழி
புகையிலை இல்லாத சமுதாயம்; செவிலியர் கல்லுாரி உறுதிமொழி
புகையிலை இல்லாத சமுதாயம்; செவிலியர் கல்லுாரி உறுதிமொழி
ADDED : ஜூன் 06, 2025 06:10 AM

கோவை ; புகையிலையால் ஏற்படும் பாதிப்பையும், புகையிலை இல்லாத நலமான எதிர்காலத்தை உருவாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்த நேரு செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக புகையிலை இல்லா தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில், பங்கேற்ற தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி புகையிலை பயன்பாட்டால், ஏற்படும் உடல்நல பாதிப்புகள், புகையிலை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்வில், விழிப்புணர்வு நாடகங்கள், விளக்கவுரைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. புகையிலை இல்லா சமுதாயத்தை உருவாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதில், நேரு கல்விக் குழுமங்களில் தலைமை செயல் அதிகாரி மற்றும் செயலாளர் கிருஷ்ணகுமார், கல்லுாரி முதல்வர் பியூலா பங்கேற்றனர்.