/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புகையிலை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது
/
புகையிலை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது
ADDED : மார் 18, 2025 04:23 AM
மேட்டுப்பாளையம்: காரமடையை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருகே இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அச்சமயம் அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர். அதில் கடைகளுக்கு விற்பனை செய்ய எடுத்துச் செல்லப்படும் தின்பண்ட பொருட்களுக்கு நடுவே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, புகையிலை பொருட்களை கடத்தி வந்த மேட்டுப்பாளையம் அன்னாஜி ராவ் ரோடு பகுதியை சேர்ந்த ஷாஜகான், 37, என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 42 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதே போல், மேட்டுப்பாளையம் பங்களாமேடு ராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக மகேஷ் குமார்,44, என்பவரை கைது செய்து 19 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.