/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டாஸ்மாக்' பாரில் விற்க பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
'டாஸ்மாக்' பாரில் விற்க பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்
'டாஸ்மாக்' பாரில் விற்க பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்
'டாஸ்மாக்' பாரில் விற்க பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : செப் 26, 2025 09:32 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, டாஸ்மாக், 'பாரில்' விற்பனை செய்வதற்காக காரில் பதுக்கி கொண்டு வந்த, 15 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில் உள்ள சினிமா தியேட்டர் அருகே, கிழக்கு ஸ்டேஷன் எஸ்.ஐ. கவுதமன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். காரில் வந்த சிவகங்கையை சேர்ந்த பாலமுருகன்,28, என்பவரை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில் உள்ள 'டாஸ்மாக்' பாரில் விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, பார் பொறுப்பாளராக உள்ள பாலமுருகன் கொண்டு வந்தார்.
அவரை கைது செய்து, 15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பார் உரிமையாளரான பொள்ளாச்சியை சேர்ந்த சந்துரு,30, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.