ADDED : டிச 20, 2024 07:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, டாஸ்மாக் மதுபான கடை எதிரே புகையிலை பொருள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 43, கூலித்தொழிலாளி. இவர், கிணத்துக்கடவு ஆர்.எஸ்., ரோடு அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடை எதிரே சட்டவிரோதமாக புகையிலை பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட கிணத்துக்கடவு போலீசார், சந்தேகத்தின் பேரில் மணிகண்டனை விசாரித்தனர். அவர், புகையிலை பொருள் விற்பனை செய்வது உறுதியானது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.