/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று விநாயகர் சதுர்த்தி; விழாக்கோலம் பூண்டது கோவை
/
இன்று விநாயகர் சதுர்த்தி; விழாக்கோலம் பூண்டது கோவை
இன்று விநாயகர் சதுர்த்தி; விழாக்கோலம் பூண்டது கோவை
இன்று விநாயகர் சதுர்த்தி; விழாக்கோலம் பூண்டது கோவை
ADDED : ஆக 26, 2025 10:41 PM

கோவை; கோவையில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கு, இந்து அமைப்புகள் படுவிமரிசையாக ஏற்பாடுகள் செய்துள்ளன.
இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், 3,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. 29 மற்றும் 31ல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.
இந்து முன்னணி இந்து முன்னணி அமைப்பு சார்பில், கோவை - மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள தெப்பக்குளம் மைதானத்தில் பாலவிநாயகர் சிலை, இன்று காலை கணபதி ஹோமத்துடன் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கோலப்போட்டி, திருவிளக்கு வழிபாடு, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நிறைவு நாளில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தலைமையில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.
இந்து மக்கள் கட்சி இந்து மக்கள் கட்சி சார்பில், கோவை ராஜ வீதி தேர்நிலைத்திடலில் ராஜகணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், பக்தி இன்னிசை, பரதநாட்டியம், குழந்தைகளுக்கான ஆன்மிக வினாடி-வினா, பாட்டு போட்டி நடத்தப்படுகிறது. தர்மராஜா திரவுபதி பீடம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு, காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நிறைவு நாளில், இ.ம.க., நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத் கொடியசைத்து, விசர்ஜன ஊர்வலத்தை துவக்குகிறார்.
மற்ற அமைப்புகள் * சிவசேனா சார்பில் ஆர்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் மைதானம், பாரத்சேனா சார்பில் சிவானந்தா காலனி மைதானம், அனுமன்சேனா சார்பில் வி.கே.கே.மேனன் சாலையில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், சிங்காநல்லுார் மற்றும் ஒண்டிப்புதுார், காமாட்சிபுரம், விவேகானந்தர் பேரவை சார்பில் பெரிய கடை வீதியில், சக்திசேனா சார்பில் சிங்காநல்லுாரில், தமிழ்நாடு பாரத்சேனா சார்பில் கணபதி மற்றும் சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
* கோவை - மருதமலை சாலை வடவள்ளி முல்லை நகரில், இயற்கையை போற்றும் வகையில், 100 கிலோ எடை வெட்டிவேரை கொண்டு உருவாக்கப்பட்ட, அழகிய விநாயகரை இன்று பிரதிஷ்டை செய்கின்றனர்.
இந்த விநாயகரில் இருந்து மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரின் மணம் வீசுவதோடு, நோய் தடுப்பாற்றல் வழிபடும் பக்தர்களுக்கு கிடைக்கும். கல்லுாரி மாணவர்கள் இணைந்து சவுரிபாளையம் பகுதியில், களிமண்ணில் விதைகளை வைத்து விநாயகர் சிலைகளை உருவாக்கி, விற்பனை செய்துள்ளனர்.
இந்து அமைப்புகள் மற்றும் பொது நல அமைப்புகள், சமூக அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்கள், நண்பர்கள் குழு சார்பில், கோவை நகர் மற்றும் புறநகரில், 3,000க்கும் மேற்பட்ட சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.