ADDED : மார் 07, 2026 05:20 AM
ஆண்டு விழா தொண்டாமுத்துார், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆண்டு விழா நடக்கிறது. காலை 10.15 மணிக்கு நடக்கும் விழாவில் அரசு கலை அறிவியல் கல்லுாரி அரசியல் அறிவியல் துறைத் தலைவர் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
மகளிர் தின விழா பிச்சனுார், ஜெ.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், சர்வதேச மகளிர் தின விழா காலை 10.30 மணிக்கு நடக்கிறது. பல்வேறு துறை பெண் ஆளுமைகள் சிறப்புரையாற்றுகின்றனர்.
ஓவியக் கண்காட்சி கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 'அவளுடைய கலை' என்ற தலைப்பில் சிறப்பு ஓவியக்கண்காட்சி நடக்கிறது. அவிநாசி ரோட்டில் உள்ள ஆர்ட் கேலரியில், காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
கலை விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், கலை விழா நடக்கிறது. பாடல்கள், பரதநாட்டியம், கரகாட்டம், நாடகம், போர்ப்பறையிசை, நாட்டுப்புறக்கும்மி, சாக்ஸபோன், சிறப்புரை ஆகிய நிகழ்வுகள்மசக்காளிபாளையம் மைதானத்தில் மாலை 5 முதல் இரவு 10 மணி வரை நடக்கின்றன.
இசைக் கொண்டாட்டம் ராஜீவ் காந்தி நகர் நலச்சங்கம் சார்பில் மகளிர் தின விழா நடக்கிறது. பார்க் மைதானத்தில் நடக்கும் விழாவில், இசைக் கொண்டாட்டம், பொழுதுபோக்கு விளையாட்டுகள், நடனம் ஆகியவை நடக்கிறது.
டெக்ஸ்பேர் கண்காட்சி சைமா சார்பில் சர்வதேச ஜவுளி இயந்திர, உதிரிபாகங்கள் கண்காட்சி, 'டெக்ஸ்பேர் 2026' அவிநாசி ரோட்டிலுள்ள, கொடிசியா வரத்தக வளாகத்தில் நடக்கிறது. உள்நாட்டு இயந்திர தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி ஜெர்மனி, ஸ்விட்சலர்லாந்து, இத்தாலி, ஜப்பான் போன்ற சர்வதே நாடுகளும் பங்கேற்கின்றன. கண்காட்சியின் 240 அரங்குகளையும், காலை 10 முதல் மாலை 6 மணி வரை பார்வையிடலாம்.
புத்தகம் கிலோ என்ன விலை? ஆர்.எஸ்.புரம், புரூக்பீல்ட்சில் நடக்கும் கிலோ புக் கண்காட்சியில் எம்.ஆர்.பி. இன்றி, கிலோ கணக்கில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கான புத்தகங்களும் உள்ளன. பிக்ஷன், நான் பிக்ஷன் என பல்வேறு பிரிவுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. காலை 10 முதல் இரவு 10 மணி வரை கண்காட்சி நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8:30 மணி வரை முகாம் நடக்கிறது.
