sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்று இனிதாக .... (21.02.2026) கோவை

/

இன்று இனிதாக .... (21.02.2026) கோவை

இன்று இனிதாக .... (21.02.2026) கோவை

இன்று இனிதாக .... (21.02.2026) கோவை


ADDED : பிப் 21, 2026 05:17 AM

Google News

ADDED : பிப் 21, 2026 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹா கும்பாபிஷேக விழா குளத்துப்பாளையம் பரமசிவன் கோவில், மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை, 9:00 மணி முதல் கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், தீபாராதனை என தொடர்ந்து இரவு வரை, சிறப்பு பூஜைகள் நடைபெறஉள்ளன.

தாய்மொழிக்கு தனிச்சிறப்பு காளப்பட்டி சுகுணா பொறியியல் கல்லுாரியில் உலக தாய்மொழி தின சிறப்பு சொற்பொழிவு, தாய்மொழிக்கே தனிச்சிறப்பு என்ற தலைப்பில் நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு துவங்கவுள்ளது.

மருத்துவ முகாம் ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி என்.எஸ்.எஸ். சார்பில் கண் மற்றும் பொது பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது. ஊஞ்சபாளையம் பகுதியில் நடக்கவுள்ள இம்முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். காலை, 10 மணியளவில் முகாம் துவங்குகிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார் புனித ஜோசப் சர்ச் மற்றும் பேரூர் ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் இரவு, 7 மணி முதல் 8.30 மணி வரை, முகாம் நடக்கிறது.

நிதிசார் பயிலரங்கு பிச்சனுார், ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பிசினஸ் சிஸ்டம்ஸ் துறை சார்பில், மாணவர்களுக்கு நிதி சார்ந்த கருத்துருக்கள் தயாரிப்பது குறித்த பயிலரங்கு கல்லுாரி அரங்கில், மதியம், 2:30 மணி முதல் நடைபெறவுள்ளது.

கைத்தறி ஆடை கண்காட்சி வீவ்ஸ் இந்தியா - 2026 என்ற கைத்தறி கண்காட்சி பீளமேடு சுகுணா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ், ராஜஸ்தான் காட்டன் முதல் பல்வேறு மாநிலங்களில் பாரம்பரிய சேலைகள், குர்திகள், வீட்டு உபயோக ஜவுளிப்பொருட்களை வாங்கலாம். காலை, 10 மணி முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.






      Dinamalar
      Follow us