sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்று இனிதாக ... (22.02.2026) கோவை

/

இன்று இனிதாக ... (22.02.2026) கோவை

இன்று இனிதாக ... (22.02.2026) கோவை

இன்று இனிதாக ... (22.02.2026) கோவை


ADDED : பிப் 22, 2026 05:39 AM

Google News

ADDED : பிப் 22, 2026 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகா கும்பாபிேஷகம் மசக்காளிபாளையத்தில் அமைந்துள்ள கோகுலகிருஷ்ணர், ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது. காலை 5.30 மணிக்கு நான்காம் கால வேள்வியும், 7.30 மணிக்கு, கடம் புறப்பாடும், 8.30 மணிக்கு, ஆலய விமான கலச கும்பாபிேஷகத்தை தொடர்ந்து, மூலவருக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. 10.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

கோல்ப் போட்டி செட்டிபாளையத்தில் உள்ள தி கோயம்புத்துார் கோல்ப் கிளப் மைதானத்தில், தேசிய அணிகள் பங்கேற்கும் ஜி.கே.டி. நினைவு தங்கக் கோப்பை 2026 கோல்ப் போட்டி இன்று நடக்கிறது. கோயம்புத்துார் கோல்ப் கிளப் நடத்தும் இப்போட்டி, இன்று காலை 11.30 மணிக்கு துவங்குகிறது.

மகோத்ஸவம் கோவையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா ஸப்தாக சேவா சங்கம் சார்பில், 33வது ஸ்ரீ ராகவேந்திர ஸப்தாக மகோத்ஸவம் ராம் நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஐயப்பன் பூஜா சங்க வளாகத்தில் நடக்கிறது. இன்று காலை 7.30 மணிக்கு அபிேஷகம், பாராயணம் மற்றும் பஜனை நிகழ்ச்சியும், 10.30 மணிக்கு கனகாபிேஷகமும், மதியம் 12.30 மணிக்கு, மகா தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு இசை நிகழ்ச்சியும் நடக்கின்றன.

லலிதாம்பிகைக்கு கும்பாபிேஷகம் பெரியதடாகத்தில் உள்ள லலிதாம்பிகை அம்மன் கோவிலில் கும்பாபி ேஷகம் இன்று நடக்கிறது. காலை 5.30 மணிக்கு, விநாயகர் பூஜை, மூல மந்திரயாகம், வேதிகா அர்ச்சனை, வேத பாராயணம் உள்ளிட்டவை நடக்கின்றன. 8 மணிக்கு, யாத்ரா தானம், யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடும், 8.30 மணிக்கு, வடபத்ரகாளி விமானத்துக்கும், 8.45 மணிக்கு, வடபத்ரகாளி அம்பிகைக்கும், 9 மணிக்கு, லலிதாம்பிகை விமான கலசத்துக்கும், 9.15 மணிக்கு, லலிதாம்பிகை அம்மனுக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு, பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது.

சொற்பொழிவு செட்டிபாளையம், ைஹவேஸ் ரோட்டில் உள்ள தாமரை கோவிலில், 92வது மாதாந்திர கூட்டம் இன்று நடக்கிறது. மாலை, 6 முதல் 6.45 மணி வரை நடக்கும் இக்கூட்டத்தில், 'வாழ்வை இனிதாக்கும் நிர்வாக உத்திகள்' என்ற தலைப்பில், எஸ்.என்.எம்.வி. கலை அறிவியல் கல்லுாரி மேலாண்மை துறை உதவி பேராசிரியர் மயில்ராஜன் சொற்பொழிவாற்றுகிறார். அனுமதி இலவசம்.

ரசிக்கலாம் வாங்க... 'சங்கீத மும்மூர்த்திகள்' என்ற 'டிவி' வரதராஜன் குழுவினரின் நட்பை கொண்டாடும் சங்கீத நாடகம் கோவையில் இன்று நடக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடக்கும் இந்த நாடகம் ராம் நகர், பட்டேல் ரோட்டில் உள்ள கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாலை, 6.30 மணிக்கு நடக்கிறது; அனுமதி இலவசம்.

கும்பாபிேஷக விழா சிங்காநல்லுார், அம்பாள் ராஜராஜேஸ்வரி, பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு, மகா தீபாராதனையும், 7.45 மணிக்கு, யாத்ரா தானம், கடம் புறப்பாடும் நடக்கிறது. 8.30 மணிக்கு, விமான கோபுர கலசத்துக்கு மூல மூர்த்தி பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. 9.30 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு, கன்னிமார் கருப்பராயன்சுவாமி கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து வருதலும், இரவு 7.00 மணிக்கு, திருக்கல்யாண வைபவமும் நடக்கின்றன.

* போத்தனுார், மேட்டூர், அம்மன் புதுாரில் எழுந்தருளி உள்ள அக்னி மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் நடக்கிறது. இன்று அதிகாலை, 5 மணிக்கு மேல், மகா தீபாராதனை, யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு நடக்கிறது. 7.45 மணிக்கு, மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. கும்பாபிேஷகத்தை தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படுகிறது. 9.30 மணிக்கு, 16 வகையான சோடச மகா அபிேஷக தசதரிசனம், தசதானம், மகா அலங்கார பூஜை நடக்கிறது.






      Dinamalar
      Follow us