/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று இனிதாக ... (26.01.2026) கோவை
/
இன்று இனிதாக ... (26.01.2026) கோவை
ADDED : ஜன 26, 2026 05:13 AM
ஆன்மிகம் தைப்பூசத் திருவிழா * சுப்பிரமணிய சுவாமி கோயில், மருதமலை. பூஜை துவக்கம், காலை 5.30 மணி. கொடியேற்றம், கற்பக விருட்ச வாகனத்தில் திருவீதி உலா, காலை 6.30 மணிக்கு மேல். அபிஷேகம், பூஜை, தீபாராதனை, காலை 10 மணி. அனந்தாசனத்தில் திருவீதி உலா, யாகசாலை பூஜை துவக்கம், மாலை 4.30 மணி.
* பாலதண்டாயுதபாணி கோயில், சுக்கிரவாரப்பேட்டை. அபிஷேகம், காலை 10 மணி. யாகசாலை பூஜை, தீபாராதனை, மதியம் 12 மணி. தீபாராதனை மாலை 6 மணி. சுவாமி திருவீதி உலா, இரவு 7 மணி. பக்தி நாட்டியம், இரவு 7 மணிக்கு மேல்.
குண்டம் பெருவிழா அங்காளபரமேஸ்வரி கோயில், காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம், சிங்காநல்லுார். அம்மன் ஆற்றில் இருந்து வருகை, அலகு தரிசனம், குண்டம் திருவிழா, 108 பால்குடம், மகா சக்தி வேள்வி, மகா அபிஷேகம், பொங்கல் வைத்தல், மாரியம்மன் உற்சவம், மாவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம், ரிசப வாகனம் மற்றும் பள்ளியறை உற்சவம், காலை 6 முதல், இரவு 7 மணி வரை.
கல்வி 'வைல்டு தமிழ்நாடு' திரையிடல் பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்.ஆர்., ஹால், அவிநாசி ரோடு, மாலை 5.30 மணி
கடல்வாழ் உயிரினக் கண்காட்சி ஏ.ஜே.கே.கலை அறிவியல் கல்லுாரி, நவக்கரை, காலை 11 முதல், இரவு 7 மணி வரை.
குடியரசு தின விழா * வ.உ.சி. மைதானம், காலை 8மணி.
* மாநகராட்சி பிரதான அலுவலகம், டவுன்ஹால், காலை, 8 மணி.
* ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை, 9.30மணி.
* கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, அரசூர், காலை 9.30 மணி.
* பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, பீளமேடு, காலை 9 மணி.
* பாரத மாதா நற்பணி அறக்கட்டளை, உடையாம்பாளையம், காலை 9.30 மணி.
* டெய்சி ரெசிடென்சி, ராமநாதபுரம், காலை 9 மணி.
* ராஜீவ்காந்தி நகர், ஆனந்தம் நகர் , 11வது வீதி, சவுரிபாளையம், காலை 9 மணி.
* பொன்னையராஜபுரம் உயர்வருவாய் பிரிவு குடியிருப்பு உரிமையாளர்கள் நலச்சங்கம், சவுடேஸ்வரி காலனி, செல்வபுரம், காலை 8.30 மணி.
பொது பரதநாட்டியம் செங்கப்பகோனார் திருமண மண்டம், சுந்தராபுரம்,காலை 10 முதல் மதியம் 1 மணி வரை. ஏற்பாடு: குறிச்சி பொங்காளியம்மன் இந்து ஒற்றுமை சங்கமம்.
குடிநோய் விழிப்புணர்வு * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

