ADDED : மார் 29, 2026 03:47 AM
'தினமலர்' நாளிதழின் வழிகாட்டி கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில், காலை 10.30 முதல் மாலை 6 மணி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதலுக்காக தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது.
கீதா உபதேசம் பொன்மணி அவிநாசிலிங்கத்தின் சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதா உபதேசம் சொற்பொழிவு, டாடாபாத், மூன்றாவது வீதியில் உள்ள ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில் நடக்க உள்ளது.
பங்குனி உத்திரம் 7ம் நாள் திருவிழா பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், காலை 5:30 மணி முதல் 9.30 மணி வரை யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்திகள் ரதாரோஹணம், மாலை 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
கோவை சத் சங்கம் ஸ்ரீ ரமணாஸ்ரமம் திருவண்ணாமலை சார்பில், வரதராஜபுரம் இ.எஸ்.ஐ., மருத்துவமனை எதிரில் உள்ள ஸ்ரீ அருணை அரங்கத்தில் காலை 9.30 மணி முதல் நடக்கிறது.
இலவச ஆலோசனை முகாம் வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும், இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ராமநாதபுரம் பங்கஜா மில் ரோட்டில் உள்ள ஜெம் மருத்துவமனையில் காலை 9 மணி முதல், மதியம் 1 மணி வரை நடக்கிறது.
ஏனுங்க வாங்க சிரிக்கலாம் கோவை நகைச்சுவை சங்கம் சார்பில், இந்துஸ்தான் கல்லூரி அரங்கில் மாலை 6 மணிக்கு பேராசிரியர் நீலகண்டன் மற்றும் சதீஸ்குமார் ஆகியோரின் இடைவிடாத சிரிப்பு வெடிகள் நிகழ்ச்சி நடக்கிறது.
வாராந்திர சத்சங்கம் மலுமிச்சம்பட்டி, அம்பாள் நகரில் ஆத்ம வித்யாயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில் யானே பொய், என் நெஞ்சம் பொய் எனும் சுவாமி சங்கரானந்தா சிறப்பு சொற்பொழிவு காலை 11.30 மணி முதல் நடக்கிறது.
