/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று இனிதாக ...(28.02.2026) கோவை
/
இன்று இனிதாக ...(28.02.2026) கோவை
ADDED : பிப் 28, 2026 05:56 AM
ஸ்ரீமத் பாகவதம் ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், 'ஸ்ரீ மத் பாகவத்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. மாலை 6.30 முதல் 8.30 மணி வரை சொற்பொழிவாளர் சுந்தரகுமார் உரையாற்றுகிறார்.
'யுகந்தா 2026' அரசூர், கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி சார்பில், மாணவர்களுக்கான 'யுகந்தா 2026' கலை இலக்கிய போட்டிகள் காலை 10 மணிக்கு நடக்கிறது. பேசன் ஷோ, வண்ணம் தீட்டுதல், ரீல்ஸ் மேக்கிங், குழு நடனம், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விளாங்குறிச்சி மாநகராட்சி துவக்கப் பள்ளியின் நுாற்றாண்டு விழா, ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடக்கிறது. பள்ளி வளாகத்தில் காலை 10 மணிக்கு விழா துவங்குகிறது.
தேசிய அறிவியல் தினம் மருதமலை ரோடு, பாரதியார் பல்கலை, தேசிய அறிவியல் தினவிழா, காலை 10.30 மணிக்கு நடக்கிறது. 'அறிவியல் துறையில் பெண்கள்' என்ற தலைப்பில் நடக்கும் விழாவில், முன்னாள் துணைவேந்தர்கள் மணியன், குழந்தைவேல் மற்றும் முருகன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
கர்நாடிக் இசை விழா கர்நாடிக் இசை விழா மாசி மகோற்சவம் என்ற தலைப்பில் ராம்நகர், ஐயப்ப பூஜா சங்கத்தில் மாலை 6.30 மற்றும் இரவு, 8.30 மணிக்கு நடக்கிறது. முன்பதிவு செய்து நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
இலக்கியச் சொற்பொழிவு பி.எஸ்.ஜி., அறநிலையம் சார்பில் ஆன்மிக இலக்கியத் தொடர் சொற்பொழிவு, பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. பேச்சாளர் சிவக்குமார் 'பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

