/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகர போலீஸ் பிரிவுக்கு இன்று 35வது பிறந்தநாள்!
/
மாநகர போலீஸ் பிரிவுக்கு இன்று 35வது பிறந்தநாள்!
ADDED : ஏப் 14, 2025 05:57 AM

கோவை, : கோவை மாநகர போலீஸ் பிரிவு ஆரம்பித்து, இன்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, காலை 6:30 மணிக்கு போக்குவரத்து விழிப்புணர்வு வாக்கத்தான் நடக்கிறது. தொடர்ந்து மாலை, போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இன்று முதல் இம்மாத கடைசி வரை போலீசார், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
போலீசாரின் குழந்தைகளுக்கு ஓவியம், பேச்சுப்போட்டி உள்ளிட்டவை, போலீஸ் - பொது மக்கள் இணைந்து கிரிக்கெட் போட்டி, சைக்கிளிங், போலீசாருக்கு மருத்துவ முகாம் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
35ம் ஆண்டு பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கமிஷனர் அலுவலகம் மற்றும் மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும், வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

