/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன் றே கடைசி! ஊரக உள்ளாட்சிகளின் பதவி இனி இருக்காது
/
இன் றே கடைசி! ஊரக உள்ளாட்சிகளின் பதவி இனி இருக்காது
இன் றே கடைசி! ஊரக உள்ளாட்சிகளின் பதவி இனி இருக்காது
இன் றே கடைசி! ஊரக உள்ளாட்சிகளின் பதவி இனி இருக்காது
ADDED : ஜன 04, 2025 11:01 PM
கோவை,: கோவை மாவட்டத்தில், கிராம ஊராட்சி, மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் பதவிக்காலம் இன்றுடன் (ஜன., 5) முடிகிறது. அருகாமையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டதால், இனி, 11 ஊராட்சிகள் இருக்காது.
கோவை மாவட்டத்தில், 228 ஊராட்சிகள், 12 ஒன்றியங்கள், ஒரு மாவட்ட ஊராட்சி உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலம், 228 ஊராட்சிகளுக்கு தலைவர்கள் மற்றும், 2,034 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றி வந்தனர்.
இதேபோல், 12 ஒன்றியங்களில் தலைவர்கள் மற்றும், 155 கவுன்சிலர்கள் இருந்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களாக, 17 பேரும், ஒரு மாவட்ட ஊராட்சி தலைவரும் செயல்பட்டு வந்தனர். இவர்களது பதவிக் காலம் இன்றுடன் (ஜன., 5) நிறைவடைகிறது. நாளை (ஜன., 6) முதல் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், செயல் அதிகாரிகளின் கீழ் செயல்படும்.
மொத்தமுள்ள, 228 ஊராட்சிகளில், சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியூர், அரசூர் ஊராட்சிகள், தொண்டாமுத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல், பட்டணம் ஊராட்சியையும் பேரூராட்சியாக உயர்த்த, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கலங்கல், காங்கேயம்பாளையம் ஊராட்சிகள் சூலுார் பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டு, சூலுார் நகராட்சி உருவாக்கப்படுகிறது. கோவை மாநகராட்சியோடு, மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடபட்டி, இருகூர், வெள்ளலுார் பேரூராட்சிகள், நீலாம்பூர், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், அசோகபுரம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சீரப்பாளையம் ஆகிய ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
மாநகராட்சியோடு இணைக்கப்படும் ஒன்பது ஊராட்சிகள், சூலுார் நகராட்சியோடு இணைக்கப்படும் இரு ஊராட்சிகள் ஆகிய, 11 ஊராட்சிகள் கலைக்கப்படும்.
நான்கு ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுகின்றன. அதனால், மொத்தம், 15 ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைகிறது. மாவட்ட அளவில் மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை, 213 ஆக குறைந்திருக்கிறது.