/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்
/
இன்று ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம்
ADDED : அக் 06, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர் : அன்னூரில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின், மேட்டுப்பாளையம் கோட்டம் சார்பில், இந்த ஊர்வலம் நடக்கிறது. இன்று மாலை 3:30 மணிக்கு தென்னம்பாளையம் ரோட்டில் யூ.ஜி. மஹாலில் இருந்து சீரூடை அணிந்த தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் துவங்குகிறது.
எக்சேஞ்ச் ரோடு, கோவை ரோடு, மெயின் ரோடு, தென்னம்பாளையம் ரோடு வழியாக மீண்டும் யு.ஜி. மகாலை அடைகிறது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறார். ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகி சீனிவாசன் பேசுகிறார்.