ADDED : மே 24, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
கோவை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட உயர்பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் (யு.பி.எஸ்.சி.) முதல் நிலை தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது.
மாவட்டத்தில் 6,526 பேர் தேர்வு எழுத உள்ளனர். அரசு கலைக்கல்லூரி, புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 15 பள்ளி மற்றும் கல்லூரிகள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
