/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று உலக புவி தினம் மூலிகைச்செடி இலவசம்
/
இன்று உலக புவி தினம் மூலிகைச்செடி இலவசம்
ADDED : ஏப் 21, 2025 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை,;உலக புவி தினத்தை முன்னிட்டு, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், இலவசமாக மூலிகைச்செடிகள் வழங்கப்படுகின்றன.
இன்று உலகம் முழுவதும் உலக புவி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மண்ணுக்கும், மனிதனுக்கும் இடையில் உள்ள பந்தத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், வீட்டில் வளர்க்கக்கூடிய மூலிகைச் செடிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
காலை 9:00 மணிக்கு, சாராதாம்பாள் கோவில் முன்பு ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.