/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று எஸ்.எஸ்.வி.எம். சார்பில் 'உருமாறும் இந்தியா' மாநாடு
/
இன்று எஸ்.எஸ்.வி.எம். சார்பில் 'உருமாறும் இந்தியா' மாநாடு
இன்று எஸ்.எஸ்.வி.எம். சார்பில் 'உருமாறும் இந்தியா' மாநாடு
இன்று எஸ்.எஸ்.வி.எம். சார்பில் 'உருமாறும் இந்தியா' மாநாடு
ADDED : செப் 01, 2025 06:19 AM
கோவை; எஸ்.எஸ்.வி.எம்.கல்வி நிறுவனங்கள் சார்பில், உருமாறும் இந்தியா மாநாடு - 2025 இன்று துவங்கி, 3ம் தேதி வரை நடக்கிறது.
எஸ்.எஸ்.வி.எம்.கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை கூறியதாவது:
கல்வி நிறுவனத்தின், 28 ஆண்டுகளுக்கு மேலான சேவையை கொண்டாடும் வகையில், இம்மாநாடு நடத்தப்படுகிறது. முன்னேற்றம் தொழில்நுட்பத்தால் மட்டுமல்ல; மனித புத்தி கூர்மை, மீள்தன்மை, நெறிமுறைகளாலும் வரையறுக்கப்படுகிறது. இம்மாநாடு, செயற்கை நுண்ணறிவு எப்படி நமது திறமை, கற்பனையை வெளிப்படுத்துகிறது என்பதை கூறும். ஒவ்வொரு பங்கேற்பாளரும், கல்வியாளர் அல்லது மாணவராக இருப்பர்.
தொழில்முனை வோர், சிந்தனையாளர்கள் என, பலரும் பங்கேற்க உள்ளனர். திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்திய கலைஞர் ஹர்ஷித் அகர்வால், இந்திய பேட்மின்டன் வீரர் பிரகாஷ் படுகோன், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர் முன்னோடி விருதுகள், உத்வேக குழு விருதுகள் என, பல்வேறு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இன்ஸ்பிரேஷனல் குரு விருதுகள், பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சென்று சிறப்பம்சம், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஊக்குவித்து, நாளைய தலைவர்களை உருவாக்கும் கல்வியாளர்களை கவுரவிக்க வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.