ADDED : ஜூலை 12, 2025 01:17 AM
சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், வேத வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம் காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. 'வாய்ப்பாட்டு கச்சேரி' நிகழ்ச்சியும் நடக்கிறது. ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகாசுவாமிகள் பங்கேற்கிறார்.
கும்பாபிஷேக விழா
வேடப்பட்டி, வேதமாதா காயத்ரி தேவி கோவிலில், கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை, 7:30 முதல் இரவு, 8:00 மணி வரை, முதல், இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நடக்கின்றன.
* ராமநாதபுரம், சிவராம் நகர் நடராஜ் நகர் லே அவுட்டில், பிரசன்ன விநாயகர் பார்வதி பரமேஸ்வரன் கோவிலில், காலை, 6:00 மணி முதல், யாககால பூஜைகள் நடக்கின்றன.
ஆன்மிக சொற்பொழிவு
பாரதீய வித்யா பவன் சார்பில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் சொற்பொழிவுகள், ஆர்.எஸ்.புரம், பவன் வளாகத்தில் நடந்து வருகிறது. காலை, 'அமலனாதிபிரான்' என்ற தலைப்பிலும், மாலை, 6:30 மணிக்கு, 'சரணாகதி' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்.
ஆண்டு விழா
டாடாபாத், சாரதா கலா மந்திரின் ஆண்டு விழா, நியூ சித்தாபுதுார், ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தில், மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. இதில், மாணவர்கள் பரதநாட்டிய நிகழ்வை அரங்கேற்றுகின்றனர்.
'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி
அக்ரி இன்டெக்ஸ் வேளாண் வர்த்தக கண்காட்சி, கோவை கொடிசியாவில் நடந்து வருகிறது. கொடிசியா வளாகத்தில், 450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில், 600 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
பகவத்கீதை சத்சங்கம்
ரேஸ்கோர்ஸ், நாராயண் டவர்சில், பகவத்கீதை சத்சங்கம் மாலை, 5:30 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கிறது. சுவாமி ஜகத்மானந்த சரஸ்வதி சத்சங்கத்தை நிகழ்த்துகிறார்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை வாயிலாக, குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
சிறுவாணி மெயின் ரோடு, காருண்யா நிகர்நிலை பல்கலையில் 31வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில் மதியம், 2:00 மணிக்கு நடக்கும் விழாவில், மிசோரம் முதல்வர் லால்துஹோமா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
வட்டமலைபாளையம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்களின், 25ம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கல்லுாரியில், காலை, 9:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், 1996 -2000ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழவுள்ளனர்.
படைப்பாற்றல் பயிலரங்கம்
வாகை வாசகர் வட்டம் மற்றும் கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், படைப்பாற்றல் பயிலரங்கம் நடக்கிறது. குனியமுத்துார், இடையர்பாளையம், ஊர்ப்புற நுாலகத்தில், காலை, 10:00 மணிக்கு பயிலரங்கம் நடக்கிறது.
ஓவியக்கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், 227வது ஓவியக்கண்காட்சி, அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலைமையத்தில் நடந்து வருகிறது. கோவை ஓவியர் மதிநிறைச்செல்வன் தனது புடைப்புகளை காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கிறார். காலை, 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை ஓவியங்களை பார்வையிடலாம்.