ADDED : நவ 15, 2024 10:02 PM

ஆலோசனைக் கூட்டம்
கொங்கு மண்டல நீராதரா உரிமைகள் மீட்புக் குழு சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. ரயில் நிலையம் அருகே, ஓட்டல் அண்ணாமாலை கூட்ட அரங்கில், காலை, 9:30 முதல் மதியம், 10:00 மணி வரைநடக்கிறது. அனைத்து சங்கங்களின் தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
கருத்தரங்கம்
சிபி ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், 'என் வாழ்க்கையே என் செய்தி' என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடக்கிறது. அகாடமியில், மாலை, 5:30 மணிக்கு கருத்தரங்கு நிகழ்ச்சி நடக்கிறது. தலைமைஆசிரியர், விரிவுரையாளர் மற்றும் மனிதவள மேலாண்மை நிபுணர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
புத்தகக் கண்காட்சி
நியுசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 38வது தேசிய புத்தகக் கண்காட்சி நடக்கிறது. நேரு ஸ்டேடியம் வளாகத்தில் அமைந்துள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுசில் நடக்கும் கண்காட்சியை, காலை, 10:00 முதல் பார்வையிடலாம்.
உயர்கல்வி மாநாடு
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவிலான எட்டாவது உயர்கல்வி மாநாடு மற்றும் கண்காட்சி நடக்கிறது. அவிநாசி ரோடு, கொடிசியா ஹாலில், ஹால் ஏ அண்ட் பி' ல் நடக்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியில், அடுத்த தலைமுறை கல்வித் தொழில்நுட்பங்கள் குறித்து கண்காட்சி, பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு நடக்கிறது.
களப்பணி
காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு சார்பில், 250வது வார களப்பணி நடக்கிறது. எழுத்தாளர் பவா செல்லதுரை கலந்துகொள்கிறார். 'அன்பு, அறம், நீர்' என்ற தலைப்பில் உரையும், கலந்துரையாடலும் நடக்கிறது. குரும்பபாளையம், ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரியில், மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'நன்றியுணர்வின் சிறப்புகள்' என்ற தலைப்பில் பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது. அனைவரும் பங்கேற்கலாம், அனுமதி இலவசம்.