sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மாநகரில் இன்றைய நிகழ்ச்சிகள்

/

 மாநகரில் இன்றைய நிகழ்ச்சிகள்

 மாநகரில் இன்றைய நிகழ்ச்சிகள்

 மாநகரில் இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : டிச 28, 2025 05:00 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாவை உபன்யாசம் ராம்நகர், கோதண்டராமசுவாமி கோவிலில், மார்கழி மாத திருப்பாவை உபன்யாசம் நடக்கிறது. தினமும் காலை 7.30 முதல் 9 மணி வரையிலும், மாலை 6.30 முதல் 8.15 மணி வரையிலும் உ.வே.வேங்கடேஷ் உரையாற்றுகிறார்.

பூஜா மகோற்சவம் ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் 75வது பூஜா மகோற்சவம் நடக்கிறது. காலை 6 மணி முதல் சூர்ய நமஸ்காரம் பாராயணம், ருத்ராபிஷேகம், சண்முகார்ச்சனை, தீபாராதனை, பஞ்சவாத்தியம், திருமஞ்சனம் மற்றும் திருவாபரண ஊர்வலம், புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம் நடக்கிறது. மாலை, 4 மணிக்கு பஞ்சவாத்தியத்துடன் ஐயப்பன் திருவீதி உலா நடக்கிறது.

கீதா உபதேசம் டாடாபாத், 104, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசனில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் கீதை உபதேசம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் பொன்மணி அவினாசிலிங்கம் உரையாற்றுகிறார்.

ஓவியக் கண்காட்சி 16வது பார்பரா சீனிவாசன் நினைவு நுண்கலை கல்லுாரி மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் 29வது ஓவியப் பயிற்சி நடக்கிறது. நுண்கலை விருது போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களின் ஓவியங்கள், காலை 10 முதல் மாலை 6 மணி வரை காட்சிக்கும், விற்பனைக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈகைச்சுடர் கோவை யூனிட்டி மற்றும் கோவை கிரீன் சிட்டி ரோட்ராக்ட் கிளப், கோவை கிழக்கு ஏஎன்என்எஸ் கிளப் சார்பில், ஈகைச்சுடர் எனும் நிகழ்ச்சி நடக்கிறது. கோவை கிழக்கு இன்னர் வீல் கிளப் மற்றும் பி.டி.ஜி. டிரஸ்ட் மற்றும் பிக் டிரஸ்ட் ஆகியவை இணைந்து, போளுவாம்பட்டி பழங்குடியின பெண்களுக்கு ஒராண்டுக்கு தேவையான நாப்கின்கள் வழங்குகின்றனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பீளமேடு, பி.எஸ்.ஜி., சர்வஜன முன்னாள் மாணவர் பேரவை சார்பில், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாபெரும் சந்திப்பு நடக்கிறது. பள்ளி வளாகத்தில் காலை 9 மணி முதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மாவட்ட சாம்பியன்சிப் போட்டி கோவை மாவட்ட அமெச்சூர் பாக்சிங் சங்கம் மற்றும் மான்செஸ்டர் பாக்சிங் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலாலான பாக்சிங் சாம்பியன்சிப் போட்டி நடக்கிறது. பி.என்., புதுாரில் உள்ள அகாடமி வளாகத்தில் காலை 6.30 முதல் போட்டிகள் நடக்கிறது.

அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11.00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.

ஷாப்பிங் திருவிழா 'கொடிசியா' சார்பில், 11வது கோயம்புத்துார் ஷாப்பிங் திருவிழா நடந்து வருகிறது. ஒன்பது மாநிலங்களில் இருந்து 500 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. சலுகை விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கலாம். மாலை 6.30 மணி முதல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளி மற்றும் குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில் இரவு, 7 முதல் 8.30 மணி வரை, முகாம் நடக்கிறது.

விழிப்புணர்வுக்கூட்டம் கோவை இயற்கை நலச்சங்கம் சார்பில் ஆரோக்கிய விழிப்புணர்வு கூட்டம், அவிநாசி ரோடு, அண்ணா சிலை எதிரே, டி.கே.பி., சேம்பரில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இயற்கை வாழ்வியல் முறைகள் வாயிலாக நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us