ADDED : ஜன 05, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: சின்னதடாகத்தில் இன்று கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது.
கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை துறை சார்பில், கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம், மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட சின்ன தடாகம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இன்று காலை, 8:00 மணிக்கு கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. இதை கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு, கால்நடைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
