ADDED : ஜூன் 07, 2025 01:26 AM

கோவை; இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி, இன்று கோவைப்புதுாரில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது.
கோவைப்புதுார் ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் சிட்டி மைதானத்தில், இன்று மாலை 6:00 மணியிலிருந்து இரவு 10:30 வரை நடக்கும் நிகழ்ச்சியில், 20க்கும் மேற்பட்ட பாடகர்கள், 40க்கும் மேற்பட்ட பாடல்களை பாட உள்ளனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 'மவுன ராகம்' முரளி கூறியதாவது: இசைஞானியின் கான மழையை கேட்க, கோவை மட்டுமல்லாமல், திருப்பூர், நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களும் பங்கேற்கின்றனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து ரசிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்க்கிங் வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய வகையில் தனித்தனி நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.