/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று பாலாலயம்
/
மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று பாலாலயம்
ADDED : டிச 04, 2024 11:03 PM
கோவை; மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடிமரத்தருகே வசந்தமண்டப கட்டுமான பணிகள் நடப்பதையடுத்து, இன்று அங்குள்ள விநாயகர் சிலைக்கு பாலாலயம் செய்யப்படுகிறது.
தமிழக சட்டசபை அறிவிப்பு, 150ன் படி, கொடிமரத்தின் அருகில் உள்ள தகர கொட்டகையினை அகற்றிவிட்டு, ஆர்.சி.சி., வசந்தமண்டபம் கட்டும் பணி, உபயதாரர் மூலம், 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, கொடிமரம் மற்றும் தீபஸ்தம்பம் பிரதிஷ்டை நிகழ்ச்சியும், அதன் தொடர்ச்சியாக கொடிமரத்துப்பிள்ளையார் என்றழைக்கப்படும், பஞ்சமுக விநாயகர் சிலையை அகற்றிவிட்டு, இன்று விநாயகர் சிலை பாலாலயம் செய்யப்பட உள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.