ஆன்மிகம்
உற்சவம்
பகல் பத்து, ஸ்ரீ வைகுண்ட ஏதாதசி இராப்பத்து உற்சவம். அருள்மிகு அரங்க நாதசுவாமி திருக்கோவில், காரமடை. ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி (சொர்க்கவாசல் திறப்பு) n அதிகாலை 5:30 மணி. திருவாய் மொழித் திருநாள் தொடக்கம் n இரவு 11:00 மணி.
வைகுண்ட ஏதாதசி விழா
அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் வீரமாட்சியம்மன் திருக்கோவில், சபரி கார்டன், சரவணா நகர், கவுண்டம்பாளையம். சொர்க்கவாசல் திறப்பு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ ரங்கநாதர் சொர்க்கவாசல் வழியாக திருவீதி உலா வருதல் n காலை 5:00 மணி. மாபெரும் அன்னதானம் n காலை 7:00 மணி முதல் n இரவு 8:00 மணி வரை.
வெள்ளி விழா ஆண்டு திருத்தேர் விழா
அருள்மிகு அருந்தவச் செல்வி உடனமர் ஸ்ரீ மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில், அன்னுார். சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் n காலை 8:00 மணி. திருத்தேர் வடம் பிடித்தல் n காலை 10:00 மணி.
'‛எப்போ வருவாரோ' சொற்பொழிவு
சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியம், கிக்கானி மேல்நிலைப் பள்ளி. அருளிசை n மாலை 6:00 மணி. அருளாளர் தியாகராஜர் சொற்பொழிவு n மாலை 6:30 மணி. ஆன்மிக உரை: சுதா ரகுநாதன்.
மார்கழி மாத உற்சவம்
அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில், நரசிம்மபுரம், குனியமுத்துார். திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனை, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் n அதிகாலை 4:15 முதல். வைகுண்ட ஏகாதசி விழா, பரமபதவாசல் நடைதிறப்பு, உற்சவர் சதுர்வீதி புறப்பாடு, திருமஞ்சனம் n அதிகாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை. ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ ரெங்கமன்னார் நீராட்டல் திருமஞ்சனம் n காலை 5:15 மணி முதல் 8:30 வரை.
வாராந்திர நிகழ்வு
ஆத்ம வித்யாலயம், அத்வைத வேதாந்த குருகுலம், எப் 5, 5வது வீதி, அம்பாள் நகர், மலுமிச்சம்பட்டி. திருமந்திர உரை. அருளுரை: சுவாமி சங்கரானந்தா n மாலை 5:30 மணி.
பொது
வைரவிழா கொண்டாட்டம்
கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சுங்கம் அருகே, திருச்சி ரோடு n விருது வழங்கும் நிகழ்ச்சி n மாலை 4:00 மணி. தலைமை: கோவை பிஷப் தாமஸ் அக்வினாஸ்.
மாணவர்கள் மேம்பாட்டு திட்டம்
கங்கா சுகாதார அறிவியல் நிறுவனம், கோவை n காலை 10:00 மணி. பங்கேற்பு: இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
ஆண்டு விழா கொண்டாட்டம்
ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கல்வீரம்பாளையம் n மாலை 5:00 மணி. பங்கேற்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி.
இசை நிகழ்ச்சி
ஆருத்ரம் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி. ஸ்ரீ மாருதி கான சபா, ஆர்.எஸ்.புரம் n மாலை 6:00 மணி முதல்.
ஜெமினி சர்க்கஸ்
திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
மாநில கைத்தறி கண்காட்சி
கல்பனா திருமண மண்டபம், கவுண்டம்பாளையம் n காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
உழவர் பொங்கல் விழா
அத்தப்பகவுண்டன்புதுார் கிராமம், இருகூர் பேரூராட்சி, சூலுார் தாலுகா n காலை 10:00 மணி. ஏற்பாடு: தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கொங்கு மண்டலம் மற்றும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம்.
பொங்கல் விழா
மங்கள இசையுடன் பொங்கல் வைத்தல். கோவை குற்றவியல் நீதிமன்ற வளாகம் n காலை 8:00 மணி. திருவள்ளுவர் திருவுருவ படத்துக்கு சிறப்பு செய்தல். குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அரங்கம் n காலை 10:00 மணி. சிறப்புரை: பேராசிரியர் ஞானசம்பந்தம். கோவை வழக்கறிஞர்கள் சங்க அரங்கம் n காலை 11:30 மணி. உறியடி நிகழ்ச்சிn மதியம் 3:00 மணி. பறையிசை நிகழ்ச்சி n மாலை 4:00 மணி. மேஜிக் ஷோ n மாலை 5:00 மணி. இன்னிசை நிகழ்ச்சி n மாலை 6:00 மணி.
யங் பிரனர்
ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ், அண்ணா சிலை அருகில், அவிநாசி ரோடு n காலை 8:00 மணி முதல்.
பரதநாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரீ வேதவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ சுயம்பு வாதப்பெருமாள் திருக்கோவில், குரும்பபாளையம் n காலை 8:30 மணி முதல்.
விளையாட்டு
மாவட்ட சதுரங்க போட்டி.
ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி n காலை 9:00 மணி.