திருப்பாவை உபன்யாசம் ராம்நகர், கோதண்டராமசுவாமி கோவிலில், மார்கழி மாத உபன்யாசம் நடக்கிறது. தினமும் காலை 7.30 முதல் 9 மணி வரையிலும், மாலை 6.30 முதல் 8.15 மணி வரையிலும் உ.வே.வேங்கடேஷ் உரையாற்றுகிறார்.
கோவை மார்கழித் திருவிழா சுந்தராபுரம், செங்கப்பக்கோனார் திருமண மண்டபத்தில், கோவை மார்கழித் திருவிழா நடந்து வருகிறது. மாலை 5.30 மணிக்கு சொற்பொழிவாளர் ஜோதி பார்வதி, 'சங்கீதப் பிரியா பஜன் மண்டலி' என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
அரவான் திருவிழா குறிச்சி, அரவான் கோவிலில் அரவான் திருவிழா நடந்து வருகிறது. தினமும் இரவு 7 மணிக்கு, பூ கம்பம் சுற்றி விளையாடுதல் சிறப்பு பூஜை நடக்கிறது.
மார்கழி உற்சவம் குனியமுத்துார், நரசிம்மபுரம், லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், மார்கழி மாத உற்சவம் நடக்கிறது. அதிகாலை 4.15 மணி முதல் திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் நடைபெறும். காலை 6.30 முதல் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு வட்டமலைபாளையம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடக்கிறது. காலை 9.30 மணி முதல் நடக்கும் நிகழ்வில் 2006-2010ம் ஆண்டு வரை பயின்ற மாணவர்கள் பங்கேற்கின்றனர். குரும்பபாளையம், சத்தி ரோடு, ஆதித்யா தொழில்நுட்பக் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, மதியம் 2 மணிக்கு நடக்கிறது.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா பெரியகுயிலி, கீதாபஜன் ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது. காலை 10 முதல் நாம சங்கீர்த்தன பஜனையும், மாலை 6 மணி முதல் வள்ளி கும்மி நிகழ்ச்சியும் நடக்கிறது.
திருவெம்பாவை பாராயணம் சவுரிபாளையம், ராஜீவ்காந்தி நகர், ராஜ கணபதி விநாயகர் கோவிலில் திருப்பள்ளி எழுச்சி அபிேஷக பூஜை காலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில், திருவெம்பாவை பாராயணம் நடக்கிறது.
கிறிஸ்துமஸ் இன்னிசை விழா போத்தனுார் அனைத்து கிறிஸ்துவ திருச்சபைகள் இணைந்து, கிறிஸ்துமஸ் இன்னிசை விழாவை நடத்துகின்றன. போத்தனுார், வெள்ளலுார் ரோடு, சி.எஸ்.ஐ., ஐக்கிய ஆலயம் வளாகத்தில் மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
விளையாட்டு விழா பீளமேடு கீதாஞ்சலி பப்ளிக் பள்ளியில், 13வது விளையாட்டு விழா நடக்கிறது. பள்ளி வளாகத்தில் காலை 7 முதல் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவை மண்டல வருமான வரித்துறை தலைமை கமிஷனர் அருண், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8:30 மணி வரை முகாம் நடக்கிறது.

