தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ​இன்றைய நிகழ்ச்சிகள்

 ​இன்றைய நிகழ்ச்சிகள்

 ​இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 16, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் குண்டம் திருவிழா * கிழக்கு அங்காளம்மன் கோவில், சந்தை கிழபுறம், மார்க்கெட் ரோடு, சூலுார். நொய்யல் ஆற்றில் அம்மனுக்கு நீராட்டு, அலங்கார பூஜை, காலை 4 மணி. அம்மன் புறப்பாடு, சிவன் பெருமாள் கோவில் வழிபாடு, காலை 5.30 மணி. அம்மன் கோவில் வந்து இறங்குதல், காலை 6.45 மணி. பூக்குண்டம் இறங்குதல், இரவு 7 மணி. அலகு நிறுத்தல், அலங்கார அபிஷேக பூஜை, காலை 10 மணி.

* பிளேக் மாரியம்மன், அங்காளம்மன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம். அம்மன் ஆற்றுக்கு புறப்படுதல், அம்மன் திருவீதி உலா வருதல், காலை 5 மணி. குண்டம் இறங்குதல், காலை 10 மணி. அக்னி கம்பம் சுற்றி பூவோடு எடுத்து கம்பம் சுற்றி விளையாடுதல் அக்னி அபிஷேகம், அலங்கார பூஜை, மதியம், 12 மணி.

ஆண்டு விழா * பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி அங்காளம்மன் கோவில், ஒக்கிலிபாளையம், ஒத்தக்கால்மண்டபம். சிறப்பு அபிஷேக, அலங்காரம் காலை 6 மணி. சுவாமி கண்திறத்தல், மாலை 6 மணி. வீதி உலா, இரவு 7 மணி.

* வெள்ளிங்கிரி ஆண்டவர் அன்னதானக் கமிட்டி, வேலாண்டிபாளையம். காவடி செலுத்தி அபிஷேக, ஆராதனை, காலை 10 மணி.

மகா சிவராத்திரி விழா * தர்மலிங்கேஸ்வரர் கோவில், மரப்பாலம், மதுக்கரை. மூன்றாம் கால அபிஷேகம் மற்றும் அலங்காரம், மதியம் 12 மணி. நான்காம் கால அபிஷேகம் மற்றும் அலங்காரம், அதிகாலை 4 மணி.

* ஞான ஈஸ்வரி அம்மன், ஞான ஈஸ்வரர், மகா வாராஹி அம்மன் கோவில், யோகசுவாமி சிவகுருஜி ஞானபீடம், சின்னம்மாள் வீதி, கே.கே.புதுார், சாய்பாபா காலனி. ஸ்ரீ ருத்ர பாராயணம், முதற்கால பூஜை, மாலை 4.30 மணி. இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, இரவு 10.30 மற்றும் இரவு 12.30 மணி. 108 சிவலிங்க திருமேனிக்கு நான்காம் காலபூஜை, அதிகாலை 4.30 மணி.

* பட்டத்து ஈஸ்வரி, கல்யாண சுந்தரேசுவரர் கோவில், ஆண்டாள் நகர், மசக்காளிபாளையம், காலை 6 மணி.

* ராஜகணபதி கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம், காலை6 மணி.

* பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர், காலை 6 மணி முதல்.

* பிரம்ம குமாரி தியான மையம், கிருஷ்ணா காலனி, திருச்சி ரோடு, ராமநாதபுரம், காலை 7 மற்றும் மாலை 4 மணி.

'பகவத்கீதை' சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.

கல்வி கருத்தரங்கு கோவை அரசு கலைக் கல்லுாரி, காலை 10 மணி.

நிறுவன தினம் சி.ஐ.டி., சாண்ட்விட்ச் பாலிடெக்னிக் கல்லுாரி, அவிநாசி ரோடு , காலை 10 மணி.

பொது சிறப்பு கருத்தரங்கம் கோஇந்தியா கூட்ட அரங்கம், ஆவாரம்பாளையம் ரோடு, பீளமேடு, மாலை 5 மணி. தலைப்பு: 2026-27 பட்நெட் நெருக்கடியும், தீர்வும்.

உளவியல் பயிற்சி முகாம் செங்கப்ப கோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம், மதுக்கரை ரோடு, காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us