/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : டிச 08, 2024 03:13 AM

இது நம்ம ஊரு சந்தை
'இயல்வாகை' அமைப்பு சார்பில், காந்திபுரம், பவர்ஹவுஸ் பேருந்து நிறுத்தம், கிராஸ் கட் ரோடு மேம்பாலம் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில், காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை, 'கோவை நம்ம ஊரு சந்தை' நடக்கிறது.
பறவைகள் ஓவியக் கண்காட்சி
கோவை அவிநாசி ரோடு, கஸ்துாரி ஸ்ரீனிவாசன் கலை அரங்கத்தில், ஓவியர் சுரேஷ் ராகவனின், பறவைகள் குறித்த ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி துவங்கிய கண்காட்சி இன்றோடு நிறைவு பெறுகிறது. காலை 10:00 முதல் மாலை 6:30 வரை பார்வையிடலாம்.
மருத்துவ ஆலோசனை முகாம்
பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் மதுக்கரை சாலையில் உள்ள கிருபா மெடிக்கல்ஸ் ஆகியவை சார்பில், பேஸ் 2, லட்சுமி காம்ப்ளக்ஸில் உள்ள கிருபா மெடிக்கல்ஸில், காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது.
ரத்ததான முகாம்
மறைந்த, மா.கம்யூ., கட்சியின் முன்னாள் நிர்வாகி சீதாராம் யெச்சூரி நினைவாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பொகளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இணைந்து, ஏ.எம். காலனி கிளை நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம், அன்னுார், ஏ.எம்., காலனி, சிவகாமி பள்ளி வளாகத்தில், காலை 9:00 மணி முதல் நடக்கிறது.
அரங்காயணம் ஆவணப்படம்
கோவை, புலம் தமிழ் இலக்கிய பலகை மற்றும் பொன்னியின் செல்வன் அண்ட் ப்ரெண்ட்ஸ் சார்பில், நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள எஸ்.என்.ஆர்., கலைரயங்கத்தில், மாலை 5:00 மணிக்கு, 48 ஆண்டுகள் அழகிய மணவாளன் திருவரங்கம் நீங்கி பயணித்த சரித்திர நிகழ்வுகள் பற்றிய ஆவணப்படம், அரங்காயணம் என்ற தலைப்பில் திரையிடப்படுகிறது.
கோவிலில் புஷ்பாஞ்சலி
சவுரிபாளையம், ராஜீவ்காந்தி நகர், அருள்மிகு ராஜகணபதி திருக்கோவிலில், காலை 9:00 மணி முதல், சுவாமி ஐயப்பன் சந்நிதியில் புஷ்பாஞ்சலி நடக்கிறது. நாம சங்கீர்த்தனம், மதியம் 1:00 மணியளவில் ராஜிவ்காந்தி நகர் பூங்கா மைதானத்தில் மஹா அன்னதானம் நடக்கிறது.
குழந்தைகள் மராத்தான்
ஓலோகி டெக் ஸ்கூல் சார்பில், ஐந்து முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 'குழந்தைகள் மராத்தான்' காலை 6:30க்கு, 5-டி ஷோபா நகர் 2, கிருஷ்ணராயபுரம், ஆவாரம்பாளையம், பீளமேடு பகுதியில் நடக்கிறது. அனுமதி இலவசம். ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
களப்பணிக்கு வாங்க
கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் களப்பணி, காலை 7:00 மணி முதல் 9:30 வரை, 368வது வார தொடர் களப்பணியாக நடக்கிறது. ஆர்வமுள்ளோர் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழா
அகில இந்திய கத்தோலிக்க ஒன்றியம், கோயம்புத்துார் கத்தோலிக்க சங்கம் சார்பில், கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழா, மதியம் 12:00 மணி முதல் மாலை 4:30 வரை, சின்ன வேடம்பட்டி (தொன்போஸ்கோ பள்ளி அருகில்), சரவணம்பட்டி - துடியலுார் பிரதான சாலையில் அமைந்துள்ள ஆலம் ஆயுர்வேத மையத்தில் நடக்கிறது.