/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : டிச 21, 2024 11:21 PM

மகா அன்னதான வைபவம்
சித்தாபுதுார், ஐயப்பசுவாமி பொற்கோவிலில், காலை,10:30 மணி முதல் 30 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்ளும், மகா அன்னதான வைபவம் நடக்கிறது.
110ம் ஆண்டு ஜெயந்தி விழா
ஸ்ரீ சுவாமி சச்சிதானந்தாஜி மகராஜின் 110ம் ஆண்டு ஜெயந்தி விழா, ஆர்.எஸ்.புரம், இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூடில், மாலை, 5:15 மணிக்கு நடக்கிறது. இதில், பாலரிஷி விஷ்வசிராசினி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
சத்சங்கம்
ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில், சத்சங்கம் நடக்கிறது. சுவாமி சங்கரானந்தா, 'ஆன்மிக சந்தேகம் தெளிதல்' என்ற தலைப்பில் பேசுகிறார். மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயத்தில், மாலை, 5:30 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
ஆண்டு விழா
சின்னமேட்டுப்பாளையம், கோயமுத்துார் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், 16 வது ஆண்டு விழா, மாலை, 4:00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடக்கிறது. ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
மருத்துவ முகாம்
நிதில்யம் அறக்கட்டளை சார்பில், 'விருட்சம் 24' என்ற தலைப்பில், சிறப்பு குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. அன்னுார், அரசு உயர்நிலைப்பள்ளியில், காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை முகாம் நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
நவக்கரை, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில், 12வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில், காலை, 10:30 மணிக்கு நடக்கும் நிகழ்விற்கு, தனலட்சுமி சீனிவாசன் குழும தலைவர் சீனிவாசன் தலைமை வகிக்கிறார்.
விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில், விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், ராஜஸ்தானி சங் அரங்கத்தில் மாலை, 5:30 மணிக்கு நடக்கும் விழாவில், எழுத்தாளர் முருகனுக்கு இந்தாண்டுக்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது.
ஸ்டைல் பஜார் கண்காட்சி
ரேஸ்கோர்ஸ், தாஜ் விவாந்தா ஓட்டலில், 'ஸ்டைல் பஜார் ' டிசைனர் மற்றும் லைப்ஸ்டைல் கண்காட்சி நடக்கிறது. விழாக்காலத்தை முன்னிட்டு புதியரக ஆடைகள், அணிகலன்கள், பரிசுகளின் கலெக்சன் குவிந்துள்ளது. காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
மினி மராத்தான்
கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், 'போதை இல்லா எதிர்காலம்' என்ற கருத்தை வலியுறுத்தி, கே.பி.ஆர்., மினி மராத்தான் போட்டி நடக்கிறது. கணியூர் டோல்கேட், கல்லுாரியின் நுழைவு வாயில் ஆகிய இடங்களில் காலை, 6:00 மணிக்கு துவங்குகிறது.
இலவச மருத்துவ சிகிச்சை
ரெக்ஸ் ஆர்தோ மருத்துவமனை மற்றும் அன்னுார் டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து, மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றன. அன்னுார், தாசபளஞ்சிக சேவா சங்க பெரிய திருமண மண்டபத்தில் காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
ஆதார் திருத்த முகாம்
ஐங்கரன் கல்வி அறக்கட்டளை மற்றும் போத்தனுார் தபால் நிலையம் இணைந்து, ஆதார் திருத்த முகாமை நடத்துகின்றன. அவதார் பப்ளிக் பள்ளியில், காலை, 10:00 முதல், மாலை, 4:00 வரை முகாம் நடக்கிறது.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'உலகத்து இயற்கை நீதி' என்ற தலைப்பில் பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது. அனைவரும் பங்கேற்கலாம், அனுமதி இலவசம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.