/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜன 18, 2025 12:44 AM

சிறப்பு தரிசனம்
கோவை, பிச்சனுார், ரங்கசமுத்திரம் பிரிவில் உள்ள, ஸ்ரீ ஆலம் உண்ட மாதேஸ்வரர் திருக்கோவிலில், கடந்த 14ம் தேதி மஹா உற்சவம் துவங்கியது. கேரள மாநிலம் மேனாம்பாறை, வேலந்தாவளம் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இன்று நடக்கும் சிறப்பு தரிசனத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
கவியரங்கம்
தமிழ்நாடு இலக்கியப் பேரவை சார்பில், கோவை அரசு பொது மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் அரங்கில், காலை 10:00 மணி முதல், வெண்பா விருந்து, நுால் வெளியீடு, பொங்கல் கவியரங்கம், திருவள்ளுவர் நாள் சிறப்பு சொற்பொழிவு ஆகியவை நடக்கின்றன. தமிழன்பர்கள் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
சர்க்கஸ்' உற்சாகம்
சிங்காநல்லுார், திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி என, மூன்று காட்சிகளாக ஜெமினி கிராண்ட் சர்க்கஸ் நடக்கிறது. சாகச கலைஞர்களின் நிகழ்ச்சி, குழந்தைகளின் பொழுது போக்குக்கு, சிறந்த உத்தரவாதம் தருவதாக உள்ளது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில், போத்தனுார் புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார் பாரத் பெட்ரோல் பங்க் அருகில், பேரூர் பிரதான சாலையில் உள்ள ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில், இரவு 7:00 முதல் 8:30 மணி வரை, குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.