/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜன 19, 2025 12:48 AM

நடராஜர் அபிஷேகம்
பேரூர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோவிலில், கடந்த 4ம் தேதி துவங்கிய உற்சவ விழாவில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 10:00 மணி முதல், சுத்த புண்யாக வாசனம், அருள்மிகு நடராஜர் அபிஷேகம், மகா தீபாராதனை ஆகியவை நடக்கின்றன.
உற்சவம் பூர்த்தி
காரமடை, அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில், பகல் பத்து, ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உற்சவத்தின் ஒரு பகுதியாக, இரவு 8:30 மணிக்கு, திருவாய்மொழித் திருநாள் சாற்றுமுறை நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'சர்க்கஸ்' சாகசம்
சிங்காநல்லுார், திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி என, மூன்று காட்சிகளாக ஜெமினி கிராண்ட் சர்க்கஸ் நடக்கிறது. சாகச கலைஞர்களின் நிகழ்ச்சி, குழந்தைகளுக்கு மிகவும் உற்சாகம் தரும்.
வீடியோ சத்சங்கம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் வாயிலாக அமைதியை அனுபவிக்கலாம். அண்ணா சாலை எதிரில், ஓசூர் சாலையில் அமைந்துள்ள ஆருத்ரா ஹாலில், காலை 11:00 மணிக்கு, நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற பெயரில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது.
முப்பெரும் விழா
அன்னுார், பாரதி சிந்தனையாளர் பணி மையம், கோவை பாரதி மூத்தோர் பாலர் அறக்கட்டளை சார்பில், அன்னுார் தாசபளஞ்சிகா பெரிய திருமண மண்டபத்தில், பிற்பகல் 3:00 மணி முதல், பாரதி விழா, மருத்துவர் கோவி நுாற்றாண்டு விழா, நுால் வெளியீட்டு விழா ஆகியவை நடக்கின்றன.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில், சுண்டக்காமுத்துார் டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை 10:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், குனியமுத்துார், பாலக்காடு பிரதான சாலை, டிவைன் மேரி சர்ச்சில், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையும், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.

