/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜன 25, 2025 11:04 PM

ராதாமாதவ விவாஹ உற்சவம்
ராம்நகர் பஜனை கோஷ்டி டிரஸ்ட் சார்பில், 82ம் ஆண்டு ராதாமாதவ விவாஹ மகா உற்சவம் நடக்கிறது. காலை, 8:00 மணி முதல், உஞ்சவ்ருத்தி பஜனை, காலை, 9:00 மணிக்கு ராதாமாதவ விவாஹம் நடக்கிறது. மாலை, 6:00 மணி முதல் ராதாமாதவ சுவாமி ஊர்வலம் மற்றும் ஆஞ்சனேய உற்சவம் நடக்கிறது.
ஆன்மிக கருத்தரங்கு
மலுமிச்சம்பட்டி, அம்பாள் நகர், ஆத்ம வித்யாலயம், அத்வைத வேதாந்த குருகுலம் சார்பில் ஆன்மிக கருத்தரங்கு நடக்கிறது. 'மனம் பற்றி ஆய்வு' என்ற தலைப்பில், காலை, 9:00 மணி முதல் கருத்தரங்கம் நடக்கிறது.
இலவச பயிற்சி வகுப்பு
அச்சிவர்ஸ் கிளப் இந்தியா சார்பில், ரயில்வே தேர்வில் வெற்றி பெற வழிகாட்டும் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஒசூர் ரோடு, ஆருத்ரா ஹாலில் மாலை, 5:00 மணி முதல் நடக்கிறது. ரயில்வே உயர் அதிகாரிகள், பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்பு.
மாவட்ட கிரிக்கெட் போட்டி
தமிழகத்திலேயே, கோவையில் முதல் முறையாக பள்ளி மாணவிகளுக்கான, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடக்கிறது. சாய்பாபா காலனி, டி.ஏ.,ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், காலை, 9:30 மணிக்கு துவங்குகிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசிலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.
ஏரி களப்பணி
நீர்நிலைகளே மண்ணின் உயிர்நாடி. மண்ணுக்கு புத்துயிர் அளிக்க, நீர்நிலைகளை காக்க களத்தில் இணைவோம். வெள்ளலுார் குளத்தில் களப்பணியுடன், 76வது குடியரசு தின விழாவும் நடக்கிறது. காலை, 7:00 முதல் களப்பணியும், காலை, 9:00 மணிக்கு கொடியேற்றுதலும் நடக்கிறது.
அறிவு உச்சி மாநாடு
ஜூபிளன்ட் தமிழ்நாடு சார்பில், குளோபல் எக்ஸ்போ மற்றும் அறிவு உச்சி மாநாடு நடக்கிறது. அவிநாசி ரோடு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு தலைப்புகளில் வல்லுனர்கள் உரையாற்றுகின்றனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பெரியகடை வீதி, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி பிற்பகல், 3:00 மணி முதல் நடக்கிறது. 1982-84ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திக்கின்றனர்.
சிறப்புரை
சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 'புகழ் ஓங்கிய பாரதம்; அறிவியலின் தாயகம்' என்ற தலைப்பில், சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது. சூலுார், முத்துக்கவுண்டன்புதுார், ரயில்வே மேம்பாலம் அருகில், மாலை, 6:00 மணி முதல் சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.
* குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
இலவச கண் சிகிச்சை மையம்
கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் பிரகதி சேவா அறக்கட்டளை மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து, இலவச கண் சிகிச்சை முகாமை நடத்துகின்றன. பீடம்பள்ளி, சமுதாயக் கூடத்தில், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.
ஆரோக்கிய விழிப்புணர்வு
இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் ஆரோக்கிய வாழ்வை மீட்டுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. கோவை இயற்கை நலச்சங்கம் சார்பில், ஆரோக்கிய விழிப்புணர்வுக்கூட்டம் நடக்கிறது. அவிநாசி ரோடு, அண்ணாசிலை எதிரே, ஸ்ரீ சாய் கபேவின், டி.கே.பி., சேம்பரில் கூட்டம், காலை, 10:30 மணிக்கு கூட்டம் நடக்கிறது.