/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : பிப் 15, 2025 07:23 AM

இசை நிகழ்ச்சி
ராம்நகர், கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், இன்று காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் இரவு, 8:30 மணி வரையும் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சத்குரு ஸ்ரீ தியாகராஜா டிரஸ்ட் சார்பில், இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நவசண்டியாக விழா
தடாகம் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பேருந்து நிறுத்தம், திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில், இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் 28வது மகா நவசண்டியாக விழா நடக்கிறது. இரண்டாம் கால பூஜைகள், சங்கல்பம், சண்டியாக கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை ஆகியவை காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.
குண்டம் திருவிழா
இடையர்பாளையம், வெள்ளாளபாளையம், வெள்ளலுார், கொண்டத்து மாகாளியம்மன் கோவிலில், 165வது குண்டம் திருவிழா நடந்து வருகிறது. இன்று தீர்த்த காவடிகள் பூஜையும் மாலை, 5:00 மணி முதல் நடக்கிறது.
சிறப்பு மையம் திறப்பு
பச்சாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், சிறப்பு மைய திறப்பு விழா நடக்கிறது. காலை 11:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், ஸ்மார்ட் மின் மொபிலிட்டி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான மையத்தை, விருந்தினர்கள் திறக்கின்றனர்.
கருத்தரங்கு
ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில், மாவட்ட கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈச்சனாரி, ரத்தினம் டெக்னோ பார்க்கில் காலை, 8:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
பட்டமளிப்பு விழா
அரசூர், கே.பி.ஆர்.,கலை மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா, காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. பெர்காடியா நிறுவனத்தின் எச்.ஆர்., ஹெட் தேபாஷிஸ் கோஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.
இலக்கியச் சந்திப்பு
தமிழ்நாடு இலக்கியப் பேரவையின் 379 மாதக் கூட்டம், ராமநாதபுரம், கணேசபுரம், ராமசாமி வீதியில் உள்ள பொதுசன சங்கம் நடராசா வாசகசாலை அறக்கட்டளையில் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில்,'பாரதி' என்ற தலைப்பில், இலக்கிய ஆர்வலர்கள் உரையாற்றுகின்றனர்.
சிரிக்கலாம்...பறக்கலாம்
பி.எஸ்.ஜி., அறநிலையம் சார்பில், ஆன்மிக இலக்கியத் தொடர் சொற்பொழிவு, பீளமேடு, பி.எஸ்.ஜி.,தொழில்நுட்பக் கல்லுாரியில், மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. சிறப்பு விருந்தினர் மதுரை ராமகிருஷ்ணன், 'சிரிக்கலாம், பறக்கலாம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.