/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : பிப் 15, 2025 11:04 PM

இசை நிகழ்ச்சி
ராம்நகர், கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், இன்று காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் இரவு, 8:30 மணி வரையும் இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சத்குரு ஸ்ரீ தியாகராஜா டிரஸ்ட் சார்பில் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
குண்டம் திருவிழா
இடையர்பாளையம், வெள்ளாளபாளையம், வெள்ளலுார், கொண்டத்து மாகாளியம்மன் கோவிலில், 165வது குண்டம் திருவிழா நடக்கிறது. தீர்த்த காவடிகள் பூஜை, மதியம், 12:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.
மத நல்லிணக்க ஜோதி விழா
மலுமிச்சம்பட்டி, ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியானபீடம் சார்பில், மதநல்லிணக்க ஜோதி விழா நடக்கிறது. இதில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத ஒற்றுமை ஏற்பட ஜோதி விழா, காலை, 6:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.
யோகா வகுப்புகள்
ஜே.எஸ்.எஸ்., இயற்கை மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு, யோகாசன வகுப்பு நடக்கிறது. க.க.சாவடி, தேச பக்தி கோட்டையில், காலை, 7:00 மணி முதல் நடக்கிறது. கல்லுாரியின் பேராசிரியர்கள் இலவசமாக வகுப்புகளை நடத்துகின்றனர்.
மாரத்தான்
கே.சி.டி., பிசினஸ் கல்வி நிறுவனம் சார்பில், பூர்வீக பழங்குடியினருக்கு ஆதரவு அளிப்பதை வலியுறுத்தி, மாரத்தான் போட்டி நடக்கிறது. சரவணம்பட்டி, குமரகுரு வளாகத்தில் காலை, 5:30 மணிக்கு மராத்தான் போட்டி நடக்கிறது.
மிஸ்டர் கோயமுத்துார்
டீம் பிடி ஜோன் சார்பில், மூன்றாவது பிடி ஜோன் கிளாசிக் பாடி பில்டிங் போட்டி நடக்கிறது. இதில், கிங் ஆப் மிஸ்டர் தென்னிந்தியா, கிங் ஆப் மிஸ்டர் கோயமுத்துார் தேர்ந்தெடுக்க, பல்வேறு பிரிவுகளில் போட்டி நடக்கிறது. மாநகராட்சி கலையரங்கத்தில், காலை, 9:00 மணி முதல் போட்டி நடக்கிறது.
விருதுகள் வழங்கல்
வெள்ளானைப்பட்டி, கலை விரும்பிகள் வழங்கும் பாரம்பரிய கலைத்திருவிழா, நுால் வெளியீடு மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடக்கிறது. வெள்ளானைப்பட்டி, மாரியம்மன் திடலில், காலை, 9:00 முதல் விழா நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.