/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜன 13, 2024 11:17 PM

சர்வதேச கிளவுன் திருவிழா
கோவை புரோஜோன் மாலில், உலக புகழ்பெற்ற கலைஞர்களின் சர்வதேச கிளவுன் கலை விழா இன்று நடக்கிறது. பிற்பகல், 3:00 மணி, மாலை, 5:00 மணி மற்றும் இரவு, 7:00 மணிக்கு என மூன்று நிகழ்வுகளாக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேஜிக் ஷோ, மைம், மியூசிக், அக்ரோபெட் மற்றும் யூனி சைக்கிளிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறுகின்றன. பொங்கல் விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை, அழைத்துச் சென்று மகிழ்விக்க ஏற்ற நிகழ்வு இது!
நம்ம ஊரு பொங்கல் விழா
கலிக்கநாயக்கன்பாளையம் தண்டுமாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் சார்பில், நம்ம ஊரு பொங்கல் விழா நடக்கிறது. கோவில் மைதானத்தில் மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவில் துவக்க நாளான இன்று பிற்பகல், 3:00 மணிக்கு, சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் துவங்குகின்றன.
பொங்கல் இசை விழா
பாரதீய வித்யா பவனின் கோவை மையம் சார்பில், 27வது பொங்கல் இசை விழா நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், பாரதீய வித்யா பவன் வளாகத்தில் மாலை, 4:15 மணிக்கு, பவானி குழுவினரின் கச்சேரியும், மாலை, 6:00 மணிக்கு விக்னேஷ் ஐய்வர் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.
பொங்கல் பரிசு பொருட்கள்
செல்வபுரம் குளம் எதிரில் உள்ள, அய்யனார் சுவாமி கோவில் மடாலயத்தில், அய்யனார் அறக்கட்டளை சார்பில், ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சேலை மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், அய்யனார் ஆதினம் ஹரிஹர சீனிவாசசுவாமிகள் வழங்குகிறார்.
பொங்கல் விளையாட்டு விழா
தடாகத்தில் உள்ள, மாரியம்மன் கோவில் மைதானத்தில், பொங்கல் விளையாட்டு விழா மற்றும் மாநில அளவிலான கைப்பந்து போட்டி, இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று மாலை,5:00 மணிக்கு முதல் லீக் போட்டியும், இரவு, 7:15 மணிக்கு இரண்டாம் லீக் போட்டியும் நடக்கின்றன.

