/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மார் 22, 2025 12:08 AM
மாரியம்மன் திருவிழா
கோவை காட்டூர் பகுதியிலுள்ள, காட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்வுகள் கடந்த, 11ம் தேதி முதல் நடக்கிறது. இன்று மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். காலை 6:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.
கல்லுாரியில் பயிலரங்கு
கோவை பச்சாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில், தகவல் தொழில்நுட்ப துறை சார்பில், தொழில்நுட்ப பயிலரங்கு இன்று நடக்கிறது. காலை, 9:30 மணி முதல் 4:00 மணிவரை வல்லுநர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்
நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் காலை, 11:00 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில் இம்முகாம் நடைபெறவுள்ளது.
சர்வதேச கருத்தரங்கு
கே.பி.ஆர்.,பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, கெமிக்கல் இன்ஜினியரிங் துறை சார்பில், 'நிலையான நீடித்த நீர் மேலாண்மை' என்ற தலைப்பில், சர்வதேச அளவிலான கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் வல்லுநர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
திறன் மேம்பாட்டு பயிற்சி
கருமத்தம்பட்டி ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் கல்லுாரி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி, கல்லுாரி அரங்கில் நடக்கிறது. இன்று காலை, 10:00 மணியளவில் இரண்டாள் நாள் அமர்வுகள் நடக்கவுள்ளன.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில் குடிநோய் விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச்சில் இரவு 7:00 முதல் 8:30 மணி வரை நடக்கிறது. பேரூர் மெயின்ரோடு ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரையும் நடக்கிறது.