/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மார் 29, 2025 05:58 AM
நாம சங்கீர்த்தனம்
மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில், வாராந்திர சத்சங்கம் நேற்று துவங்கியது. இன்று, மாலை, 5:30 முதல் 7:00 மணி வரை, நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. வெங்கடேஷ் பாகவதர் குழுவினர் நிகழ்த்துகின்றனர்.
கொங்குநாடு மீதான பார்வை
பாரதீய வித்யா பவன் சார்பில், 179வது நிகழ்வில், ' வெளிநாட்டார் பார்வையில் கொங்குநாடு' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், பாரதீய வித்யா பவனில், மாலை, 5:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் இளங்கோவன் உரை நிகழ்த்துகிறார்.
கிரிக்கெட் போட்டி
சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரி, டெவ்லீடர்ஸ் அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து, தமிழ்நாடு காதுகேளாதோருக்கான ஜோனல் வுமன்ஸ் கிரிக்கெட் டி 20 போட்டியை நடத்துகிறது. சரவணம்பட்டி,கல்லுாரி வளாகத்தில்காலை, 9:30 மணிக்கு நடக்கிறது.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவசான் கலை மையத்தில், 'ரிதமிக் பேலட்' தொடரின் 12வது ஓவியக் கண்காட்சிநடக்கிறது. காலை, 10:30 முதல் மாலை, 6:00 மணி வரை பொதுமக்கள் இலவசமாக ஓவியக் கண்காட்சியை பார்வையிடலாம்.
பட்டமளிப்பு விழா
பெரியநாயக்கன்பாளையம், யுனைடெட் தொழில்நுட்பக் கல்லுாரியில், 11வது பட்டமளிப்பு விழா, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. ஜோதிபுரம், பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 23வது பட்டமளிப்பு காலை, 10:30 மணிக்கு நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
அலுமினி டிராபி
வட்டமலைபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் உடற்கல்வியல் துறை மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், 'அலுமினி டிராபி'நடக்கிறது. ஹாக்கி மற்றும் த்ரோபால் போட்டிகள் கல்லுாரி வளாகத்தில், மாலை, 9:00 மணிக்கு நடக்கின்றன.
ஏ.ஐ., சமீபத்திய டிரெண்ட்
நவக்கரை, தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லுாரியில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் தற்போதைய டிரெண்டுகள் என்ற தலைப்பில், தேசிய கருத்தரங்கு நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில், காலை, 10:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், ஏ.ஐ., மற்றும் ரோபோடிக்ஸ் வல்லுனர்கள் உரையாற்றுகின்றனர்.
ஸ்ரீமத் பகவத் சத்சங்கம்
கோவைப்புதுார், பிராமண சேவா சபா சார்பில், ஸ்ரீ மத் பகவத் சத்சங்கம் சபா வளாகத்தில் நடக்கிறது. மும்பை சந்துரு பாகவதர், ஸ்ரீகாந்த் சர்மா மற்றும் ஹரி நாராயண சர்மா ஆகியோர்சத்சங்கத்தை நடத்துகின்றனர்.காலை, 6:30 மணிக்கு பாராயணமும், மாலை, 4:30 மணிக்கு உபன்யாசமும் நடக்கிறது.
ஜெர்மன் திரைப்பட காட்சி
'தி லைப் ஆப் அதர்ஸ்' என்ற புகழ்பெறற ஜெர்மன் திரைப்படம், இலவசமாக கோவையில் இன்று காட்சிப்படுத்தப்படுகிறது. அவிநாசி ரோடு, கோயம்புத்துார் கோதே- சென்ட்ரம் பிரசிடெண்ட் ஹாலில், மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. முன்பதிவு செய்தவர்கள் இலவசமாக பங்கேற்கலாம்.