/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : மார் 29, 2025 11:31 PM
ராமநவமி மகோற்சவம்
80ம் ஆண்டு ராமநவமி மகோற்சவம், ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் வீதியில் நடக்கிறது. இன்று, காலை, 7:15 மணி முதல், ராமர் படம் ஆவாஹனம், பூஜை, வேதபாராயணம், மாலை, 6:30 முதல் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு பஜனை நடக்கிறது.
ஆனந்த வாழ்விற்கு
செட்டிபாளையம், ஹைவேஸ் ரோடு, தாமரைக் கோவிலில், 82வது மாதாந்திர ஆன்மிக சொற்பொழிவு மாலை, 6:00 முதல் நடக்கிறது. இதில், விருந்தினர் 'ஆனந்த வாழ்வுக்கான ஆரோக்கிய சிந்தனைகள்' என்ற தலைப்பில் உரைநிகழ்த்துகிறார்.
ஆன்மிக ஐயம் தெளிதல்
மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில், ஆன்மிக சிறப்புரை நிகழ்ச்சி, மாலை 5:30 முதல் இரவு, 7:00 மணி வரை, நடக்கிறது. 'அறிவியல் ஆன்மிக ஐயம் தெளிதல்' என்ற தலைப்பில், சுவாமி சங்கரானந்தா சிறப்புரையாற்றுகிறார்.
பகவத்கீதை சொற்பொழிவு
உங்கள் எண்ணங்களால் ஒன்றை உருவாக்கவும், அழிக்கவும் முடியும் என போதிக்கும் பகவத்கீதை மனமே வலிமையானது என்கிறது. டாடாபாத், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷனில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.
இளமை எனும் பூங்காற்று
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'இளமை எனும் பூங்காற்று' எனும், பாடகர் சாய் விக்னேஷ் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், மாலை, 6:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், இளமை ததும்பும் இனிய திரையிசைப் பாடல்களை பாடி அசத்துகிறார்.
குறும்பட வெளியீட்டு விழா
சுந்தராபுரம், செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில், குறும்பட வெளியீட்டு விழா நடக்கிறது. 'போதையில்லா பாதை' என்ற குறும்படம், மாலை, 5:30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தொடர்ந்து, குறும்பட குழுவினருக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இசை விருந்து
சரவணம்பட்டி, கே.ஜி.கலை அறிவியல் கல்லுாரியில், கல்லுாரி கலை விழா இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது. திறந்தவெளி மைதானத்தில் நடக்கும் விழாவில், பாடகர்கள் சாம் விஷால், ரக்சிதா, அஜய் ஆகியோர் பல்வேறு திரைப்பட பாடல்களை பாடி அசத்துகின்றனர்.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம், 'ரிதமிக் பேலட் தொடரின், 12வது மற்றும் 223வது ஓவியக் கண்காட்சியை நடத்துகிறது. சென்னை ஓவியர்கள் ராஜு துர்செட்டிவார், மனிஷா ராஜு ஆகியோர் தங்கள் ஓவியங்களை காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கின்றனர். காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 மணி முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்துதரப்படுகிறது.
இலவச மருத்துவ முகாம்
பி.ஆர்.ஜே., ஆர்த்தோ சென்டர் மற்றும் மேக் மருத்துவமனை, வடவள்ளி நாயர் சேவை சங்கத்துடன் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றன. வடவள்ளி, சைல்டு விகாஸ் வித்யா மந்திர் வளாகத்தில், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி ரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.