/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஏப் 12, 2025 11:32 PM
உற்சவத்திருவிழா
காட்டூர், முத்துமாரியம்மன் கோவிலில், 85ம் ஆண்டு உற்சவத்திருவிழா, கடந்த ஏப்.,1ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி, நடந்து வருகிறது. விழாவில் இன்று மாலை, 6:00 மணிக்கு, சாரதாம்பாள் அலங்காரம் நடக்கிறது.
கம்பராமாயண சொற்பொழிவு
அன்னுார், ஸ்ரீதேவி, பூதேவி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், 20ம் ஆண்டு ராமநவமி விழாவை முன்னிட்டு, தொடர் கம்பராமாயண சொற்பொழிவு நடக்கிறது. இன்று இரவு, 7:00 மணிக்கு,' நல் மருந்து உதவும்' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் மகேஸ்வரி சற்குரு உரையாற்றுகிறார்.
சித்திரைக் கவியரங்கம்
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'காலம் மாறிப்போச்சு' என்ற தலைப்பில், சித்திரைக் கவியரங்கம் நடக்கிறது. கனவு, உள்ளம், காதல் மற்றும் உலகம் மாறிப்போச்சு போன்ற தலைப்புகளில், விருந்தினர்கள் பேசுகின்றனர். ஆர்.எஸ்.புரம், மாருதி கலை அரங்கத்தில், மாலை, 6:30 மணிக்கு கவியரங்கம் நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
சித்திரைத் திருவிழா
எய்ம் பவுண்டேஷன் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில், கலை, விளையாட்டு, இசை சங்கமாக சித்திரைத் திருவிழா நடக்கிறது.மாலை, 4:00 மணி முதல், பலகுரல் நிகழ்ச்சி, சிரிப்புரை மற்றும் காந்தார, கருப்புசாமி நடனங்கள் நடக்கின்றன. அன்னுார், அ.மு.காலனியில் விழா நடக்கிறது.
பகவத்கீதை சொற்பொழிவு
உங்கள் எண்ணங்களால் ஒன்றை உருவாக்கவும், அழிக்கவும் முடியும் என போதிக்கும், பகவத்கீதை மனமே வலிமையானது என்கிறது. டாடாபத், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷனில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.
சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 மணி முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.
இலக்கியச் சொற்பொழிவு
கோவை வசந்தவாசல் கவி மன்றம் சார்பில், மாத அமர்வு மற்றும் நுால் வெளியீடு நிகழ்ச்சி நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், கோவை உற்பத்தித் திறன் குழு அரங்கில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. 'தமிழ் இலக்கியத்தின் இரும்பு மனிதர் உ.வே.சா.,' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
கண் பரிசோதனை முகாம்
கோவை மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கு உதவும் பேரவை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. கோவை அரவிந்த் கண் மருத்துவ மனை இணைந்து வழங்கும் முகாம், ஆனைகட்டி, சமுதாய கூடத்தில், காலை, 8:30 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கிறது.

