/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஏப் 19, 2025 03:04 AM
சித்திரைப் பெருந்திருவிழா
அவிநாசி ரோடு, தண்டுமாரியம்மன் கோவிலில், சித்திரைப் பெருந்திருவிழா நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, 'நடன நாட்டிய' நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
தரங்கிணி மகோற்சவம்
ராம்நகர், கோதண்டராமசுவாமி கோவிலில், வரஹூர் நாராயணதீர்த்தரின் கிருஷ்ணலீலா தரங்கிணி மகோற்சவம் நடக்கிறது. காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை, ஸ்ரீநிவாச பாகவதர் குழுவினரின், தரங்கிணி கீதங்கள் 11, 12வது தரங்கங்கள் நடக்கிறது.
குண்டம் திருவிழா
கணபதி, கணபதி மாநகர், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடக்கிறது. இன்று, இரவு, 7:00 மணிக்கு, சங்கமம் கலைக்குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் வள்ளிக்கும்மி நடைபெறும்.
'சைபர் குற்றம்' விழிப்புணர்வு
சைபர் சொசைட்டி ஆப் இந்தியா சார்பில், சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சைபர் சொசைட்டி ஆப் இந்தியாவில், கோவை கிளை திறப்பு விழா நடக்கிறது. ஆர்.வி., ஓட்டல் கருத்தரங்க கூடத்தில், காலை, 9:30 மணி முதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நுால்கள் வெளியீட்டு விழா
தமிழ்நாடு இலக்கியப் பேரவை சார்பில், ' சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம் - கொண்டறங்கிக் கோமான்' ஆகிய இரு நுால்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. கோவை அரசு மருத்துவமனை, ரயில்வே குடியிருப்பு பொறியாளர் இல்லத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
'மனநலமே மகிழ்ச்சி'
பி.எஸ்., அறநிலையம் சார்பில், ஆன்மிக இலக்கியத் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. இன்று, பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், மாலை, 5:15 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது. 'மனநலமே மகிழ்ச்சி' என்ற தலைப்பில், உளவியலாளர் ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.
கலை விழா
நஞ்சுண்டாபுரம் ரோடு, மே பிளவர் அபார்ட்மென்டில், 'ஹீட் வேவ்ஸ்' என்ற தலைப்பில் வளாக தினம் எனும் கலை விழா கொண்டாடுகின்றனர். மாலை, 6:30 மணிக்கு துவங்கும் நிகழ்வில், பாடகர்கள் கார்த்தி, அகிலேஷ், டெய்சி மற்றும் சிம்மு ஆகியோரின் பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. டி.ஜே.,டான்ஸ் மற்றும் லக்கி டிரா போட்டியும் உள்ளது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.

