sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : மே 17, 2025 04:13 AM

Google News

ADDED : மே 17, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கல்யாண திருவிழா


பெரியார் நகர், பண்ணாரி மாரியம்மன் கோவில், சக்தி விநாயகர் கோவிலில் 42ம் ஆண்டு திருக்கல்யாண திருவிழா நடந்து வருகிறது. இன்றைய நிகழ்வில், மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை, அபிஷேக பூஜையும் தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

சமஷ்டி உபநயனம்


டி.டி.ஆர்., வெங்கட்ரமணன் டிரஸ்ட் சார்பில், சீதா கல்யாணம் 11ம் ஆண்டு சமஷ்டி உபநயனம் நடக்கிறது. சாமி அய்யர் புதுவீதி, ஆனந்த தீர்த்த மந்தீர் திருமண மண்டபத்தில் மாலை, 4:00 மணிக்கு மேல் உபநயனம் நடக்கிறது.

கும்பாபிஷேக விழா


சலிவன் வீதி, ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம், அபயபிரத யோக ஆஞ்சநேயர் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இன்று காலை, 6:00 முதல் இரவு, 7:32 மணி வரை, யாக சாலை பூஜை, வேதபாராயணம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடக்கின்றன.

ஆன்மிக சொற்பொழிவு


ராம்நகர், கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் சார்பில், சிறப்பு உபன்யாசம் நடக்கிறது. ராம்நகர், ராமர் கோவிலில், மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை , 'சுந்தரகாண்டம்' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் சுந்தரகுமார் உரையாற்றுகிறார்.

குண்டம் திருவிழா


ராம்நகர், கோகலே வீதி, மங்கள விநாயகர் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை மாத திருக்கல்யாண உற்சவம் மற்றும் குண்டம் திருவிழா நடக்கிறது. இறுதிநாளான இன்று மதியம், 12:00 மணிக்கு அபிஷேக பூஜையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

உழவாரப்பணி


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்கோவில் பக்தர்கள் பொதுநல சங்கம் சார்பில் உழவாரப்பணி நடக்கிறது. காலை, 9:30 மணி முதல் நடக்கும் உழவாரப்பணியில் ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

ஆண்டு விழா


கிணத்துக்கடவு, அக் ஷயா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில், விளையாட்டு விழா காலை, 9:00 மணி முதல் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. தொடர்ந்து, ஆண்டுவிழா மதியம், 1:30 மணிக்கு நடக்கிறது.

பட்டமளிப்பு விழா


அரசூர், கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடக்கிறது. கிராம்ப்டன் நிறுவனத்தின் பீப்புள் ஆபரேஷன் தலைவர் சவுரப் ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.

ஓவியக்கண்காட்சி


கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், 14வது ரிதமிக் பேலட் தொடரின் ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது. அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலை மையத்தில், 'மூன்றாவது கண்' என்ற தலைப்பில் நடக்கும் கண்காட்சியை, காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை கண்டு ரசிக்கலாம்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை,முகாம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us