/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜூன் 07, 2025 01:27 AM
கும்பாபிஷேக விழா
பீளமேடு, முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 8:00 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜையும், காலை, 11:00 மணிக்கு, பிரதிஷ்டை செய்யும் தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜையும், இரவு, 8:00 மணிக்கு, பரிவார மூர்த்திகள், மூல மூர்த்திகளை கருவறையில் நிலை நிறுவதலும் நடக்கிறது.
விசாகத் திருவிழா
கோட்டை மேடு, பூமி நீளா நாயகி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், வைகாசி விசாகத் திருவிழா கடந்த ஜூன் 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்ததை தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
பூச்சாட்டு திருவிழா
வெள்ளிமலைப்பட்டினம், மாகாளியம்மன் கோவிலில், பூச்சாட்டு திருவிழா நடக்கிறது. விழாவின் ஒரு பகுதியாக, மாலை, 6:30 மணிக்கு, வெள்ளிமலைப்பட்டினம் நவீன் பிரபஞ்ச நடனக்குழுவினரின் வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, பூவோடு கோவில் வலம் வருதல் நடக்கிறது.
கோபுர கலச ஸ்தாபனம்
பேரூர், வேடப்பட்டி, சிங்காநல்லுார் அம்மன், பக்தி கணபதி, பதஞ்சலி மகரிஷி மற்றும் பரிவார ஆலய மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 7:30 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. காலை, 11:00 மணி முதல்,கோபுர கலச ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், யந்திர பிரதிஷ்டையும், மாலை, 4:00 மணிக்கு மேல், மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது.
இளையராஜா இசை நிகழ்ச்சி
ஜி ஸ்கொயர், மவுனராகம் முரளி கிரியேட்டிவ் உள்ளிட்டவை இணைந்து இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நான்கு மணி நேர, இளையராஜாவின் நேரிடை இசை நிகழ்ச்சி, கோவைப்புதுார், ஜி ஸ்கொயர் 7 ஹில்ஸ் சிட்டியில், மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
யாக சாலை பூஜைகள்
* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யாகவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைப்புதுார். முளைப்பாரி எடுத்து வருதல், யாகசாலை பிரவேசம், ஹோமங்கள், பூர்ணாஹூதி l மாலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரை.
* ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், வீரகேரளம். இரண்டாம் கால யாக பூஜை l காலை, 8:30 மணி. மூன்றாம் கால யாக பூஜை l மாலை, 5:00 மணி.
* மகா கணபதி கோவில், கோ- ஆப்ரேடிவ் காலனி, உப்பிலிபாளையம் l யாகசாலை பூஜைகள், ஹோமங்கள் l காலை, 8:00 மணி முதல்.