sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : ஜூன் 07, 2025 11:42 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கண்ணதாசன்' சொற்பொழிவு


கோவை வசந்தவாசல் கவி மன்றம் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு, ரேஸ்கோர்ஸ், கோவை உற்பத்தித் திறன் குழு அரங்கில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், கவிஞர் மருதுார் கோட்டீஸ்வரன், 'கவியரசர் கண்ணதாசன்' எனும் தலைப்பில் உரையாற்றுகிறார்.

சமஸ்கிருத வகுப்புகள்


ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.

ரத்ததான முகாம்


தமிழக வெற்றிக் கழகம் அன்னுார் தெற்கு ஒன்றியம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இணைந்து, ரத்ததான முகாமை நடத்துகின்றன. அன்னுார், அரசு மருத்துவமனையில், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.

பூச்சாட்டு திருவிழா


வெள்ளிமலைப்பட்டிணம், மாகாளியம்மன் கோவிலில், பூச்சாட்டு திருவிழா நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, லீலா கிருஷ்ணா பிருந்தாவனம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு பூவோடு கோவில் வலம் வருதல், முனியப்பன் சாந்தி வாங்குதல், இரவு, 10:00 மணிக்கு நடக்கிறது.

மகா கும்பாபிஷேக விழா


* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அய்யாகவுண்டர் வீதி, குளத்துப்பாளையம், கோவைபுதுார். திருப்பள்ளி எழுச்சி, ஹோமம், வேதபாராயணம், பிராண பிரதிஷ்டை n காலை, 6:00 மணி. மகா கும்பாபிஷேக விழா n காலை, 10:00 மணி முதல். மகா அன்னதானம் n மதியம், 12:00 மணி.

* மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், வீரகேரளம். நான்காம் கால பூஜை n காலை, 5:45 மணி. விமானங்கள் கும்பாபிஷேகம் n காலை, 10:40 மணிக்கு மேல். கும்பாபிஷேகம் n காலை, 10:50 மணிக்கு மேல் 11:10 மணிக்குள். மூலாலய கும்பாபிஷேகம், அலங்கரா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் n காலை, 11:40 மணி. மகா அன்னதானம் n மதியம், 12:00 மணி. உற்சவ திருவீதி உலா n இரவு, 7:00 மணி.

* சிங்காநல்லுார் அம்மன், கணபதி, பதஞ்சலி மகரிஷி கோவில், வேடப்பட்டி, பேரூர். நான்கு கால பூஜைகள் n காலை, 4:00 மணிக்கு மேல். யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு n காலை, 7:00 மணிக்கு. மகா கும்பாபிஷேகம் n காலை, 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள். மகா அன்னதானம் n காலை, 10:30 மணி.

* மகா கணபதி கோவில், கோ- ஆப்பரேடிவ் காலனி, உப்பிலிபாளையம். முலமந்திர ஜப ஹோமங்கள், மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், திருக்குடங்கள் புறப்பாடு n காலை, 4:00 மணி. மகா கும்பாபிஷேகம் n காலை, 7:30 மணி முதல் 8:30 மணிக்குள்.

* பட்டத்தரசியம்மன், மகா பால கணபதி, பால முருகன், முனியப்ப சுவாமி, நாகர் சன்னதி கோவில்கள், பசுமை நகர், செல்வபுரம் n காலை, 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள்,

* முத்து மாரியம்மன் கோவில், பீளமேடு n காலை, 7:35 மணிக்கு மேல் 8:30 மணிக்குள்.

* பொம்மியம்மன் கோவில், நாயக்கன்பாளையம் n காலை, 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us