/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜூன் 13, 2025 11:11 PM
சொற்பொழிவு
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், உபன்யாசம் மற்றும் வில்லி பாரதம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று, மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை, நள சரித்திரம் நிகழ்ச்சி நடக்கிறது.
மாதாந்திர பஜன்
ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சார்பில், மாதாந்திர பஜன் நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ மாருதி கான சபாவில், மாலை, 5:00 மணி முதல் நடக்கும் பஜன் நிகழ்வில் பங்கேற்கலாம், அனுமதி இலவசம். நிகழ்ச்சியை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்.
பேரூரடிகளார் நுாற்றாண்டு விழா
தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நுாற்றாண்டு விழாவையொட்டி சிவபூஜை நடக்கிறது. வெள்ளலுார், இடையர்பாளையம், உமா மகேஸ்வர் கோவிலில், மாலை, 4:30 மணி முதல் பூஜை நடக்கிறது.
ஆசிய ஜூவல்லரி கண்காட்சி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய ஜூவல்ஸ் நகை கண்காட்சி மற்றும் விற்பனை, அவிநாசி ரோடு, தி ரெசிடன்சி டவர்ஸ் ஓட்டலில் நடக்கிறது. இந்தியாவின் சிறந்த 50 நகைக்கடைகளில் இருந்து விலை மதிப்பற்ற மற்றும் மிக அழகான நகைகள் காட்சிப்படுத்தபட்டுள்ளன. காலை, 10:30 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
அந்தோணியார் ஆலய திருவிழா
புலியகுளம், அந்தோணியார் ஆலய தேர்பவனி திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று, மாலை, 6:00 மணிக்கு, ஒத்தக்கால்மண்டபம் பங்குதந்தை ஜாய் ஜெயசீலன் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது.
பட்டமளிப்பு விழா
கிணத்துக்கடவு, அக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், 12வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. கல்லுாரியில், காலை, 10:30 மணிக்கு நடக்கும் விழாவில், விவிடிஎன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சி.டி.ஒ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.
தேசிய மாநாடு
கோவை ஜெம் மருத்துவமனை சார்பில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய அளவிலான மாநாடு நடக்கிறது. அவிநாசி ரோடு, நீலாம்பூர், ஓட்டல் லீ மெரிடியனில் காலை, 11:00 மணிக்கு மாநாடு நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சையால், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.