sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : ஜூன் 29, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசுமை சைக்கிளத்தான்


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், பசுமை சைக்கிளத்தான் இன்று நடக்கிறது. கோவை மகளிர் பாலிடெக்னிக், ஆர்.டி.ஒ., அலுவலகம் முதல் ரேஸ்கோர்ஸ், தாமஸ் பார்க் வரை, காலை, 7:15 மணிக்கு துவங்குகிறது.

மாணிக்க வாசகர் குருபூஜை


சிங்காநல்லுார், தமிழ்நாடு ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், மாணிக்க வாசகர் குருபூஜை விழா நடக்கிறது. இதையொட்டி, சிவனடியார்கள் பங்கேற்கும், 'வசி சத்சதங்கம்', மற்றும் 'சிறப்பு திருவாசக முற்றோதல்' நிகழ்ச்சி காலை, 7:00 மணி முதல் நடக்கிறது.

திருவாசகம் முற்றோதல் விழா


மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் முற்றோதல் பெருவிழா, விளாங்குறிச்சி ரோடு, சரவணம்பட்டி, எஸ்.எம்.எஸ்., மஹாலில் நடக்கிறது. காலை, 6:00 மணி முதல், ரத்தினகிரி குமரக்கடவுளுக்கு சிவகாமி அம்பாள், சரவணமாபுரீஸ்வருக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. திருவாசகம் முற்றோதல் பெருவிழா, காலை, 8:00 மணிக்கு நடக்கிறது.

திருப்பணி துவக்க விழா


போத்தனுார், குருசாமி பிள்ளை வீதி, செல்வ விநாயகர், பாலமுருகன் கோவில் திருப்பணி துவக்க விழா நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு மேல் வேள்வி வழிபாடுகள் தொடங்கப்பெற்று, காலை, 8:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் திருப்பணித் தொடக்க விழா நடக்கிறது.

கீதை உபதேசம்


ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதை உபதேசம் நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசனில் மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.

பொதுக்குழு கூட்டம்


அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், பொதுக்குழு கூட்டம் ரயில் நிலையம் எதிரில், கீதா ஹாலில் காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. கடந்த மண்டல, மகர விழா காலங்களில் ஐயப்ப பக்தர்களுக்கு சேவை புரிந்தவர்களுக்கு, கொடை வழங்கிய தொண்டர்களுக்கு, பாராட்டு விழாவும் நடக்கிறது.

சமஸ்கிருத வகுப்புகள்


ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்கா முத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.

* குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us