/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜூலை 04, 2025 11:00 PM
நலம் நம் கையில்
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், நலம் குறித்த யூகங்கள் மற்றும் அதன் உண்மைகள் குறித்து விளக்கமளிக்கும், 'நலந்தானா, நலம் நம் கையில்' நிகழ்ச்சி நடக்கிறது. மூத்த சித்த மருத்துவர் சிவராமன் தலைமை வகிக்கிறார். மாலை, 6:00 மணிக்கு நடக்கும் இவ்விழாவில், நீரிழிவு நோய், பெண் ஆரோக்கியம், வாழ்வியல் நோய் மற்றும் சிகிச்சையில் ஆயுர்வேதம் என்ற தலைப்பில் மருத்துவர்கள் உரையாற்றுகின்றனர்.
பிரத்யங்கிரா நிகும்பலா பூஜை
ஸ்ரீ விஜய தட்ஷிண மஹாயோனி பீடம், ஸ்ரீ மாதா யந்த்ராலயா ஆகியவை சார்பில், பிரத்யங்கிரா நிகும்பலா பூஜை நடக்கிறது. புதுப்பாளையம், தீனம்பாளையம், மேற்கு சித்திரைச்சாவடி ரோடு, ஸ்வாமிஸ் ஆதித்யா பகுதியில், காலை, 6:00 மணி முதல் பூஜைகள் நடக்கின்றன.
பகவத்கீதை சத்சங்கம்
ரேஸ்கோர்ஸ், நாராயண் டவர்சில், பகவத்கீதை சத்சங்கம் மாலை, 5:30 முதல் இரவு, 7:00 மரணி வரை நடக்கிறது. சுவாமி ஜகத்மானந்த சரஸ்வதி சத்சங்கத்தை நிகழ்த்துகிறார்.
உழவர் தினப் பேரணி
விவசாயிகள் சங்கம் சார்பில், போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்திட உழவர் தினப் பேரணி நடக்கிறது. ஈச்சனாரி - மலுமிச்சம்பட்டி சர்வீஸ் ரோடு, ஆஞ்சநேயர் கோவில் அருகில் காலை, 10:30 மணிக்கு பேரணி நடக்கிறது. பி.ஒய்., மஹாலில் காலை, 11:00 மணிக்கு, நினைவஞ்சலிக் கூட்டம் நடக்கிறது.
பண்டரி பஜனை
ராமநாதபுரம், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத நரசிங்கப் பெருமாள் கோவிலில், ஆஷாட சுத்த ஏகாதசி 44ம் ஆண்டு மகோற்சவம் நடக்கிறது. காலை, 9:30 மணி முதல், பண்டரி பஜனை, கருடக் கொடியேற்றம், பிருந்தவான பூஜை, கிருஷ்ணா லீலா பஜனையினர் பூஜை, திருக்கோஷ்டியினர் பூஜை ஆகியவை நடக்கிறது.
இசைக்கருவிகள் கண்காட்சி
'போல்க் டேன்ஸ் ஸ்டூடியா' சார்பில், 70க்கும் மேற்பட்ட நாட்டார் இசைக் கருவிகள் கண்காட்சி நடக்கிறது. சிந்தாமணி பேருந்து நிறுத்தம், மருவரசி வளாகம் இரண்டாவது தளத்தில், காலை, 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.
இலவச யோகா பயிற்சி
முதலிபாளையத்தில் உள்ள எம்.நஞ்சப்பா செட்டியார் மெட்ரிக் பள்ளி சார்பில், பள்ளியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. பள்ளி வளாகத்தில், காலை, 5:30 முதல் 6:30 மணி வரை பயிற்சி நடக்கும்.
பட்டமளிப்பு விழா
பாலக்காடு ரோடு, க.க.சாவடி, ஸ்ரீ நாராயண குரு கலை கல்லுாரியில், பட்டமளிப்பு விழா நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில் காலை, 10:30 மணிக்கு நடக்கும் விழாவில், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பிரேம்குமார் பங்கேற்று பட்டங்களை வழங்கி கவுரவிக்கிறார்.
பரிசளிப்பு விழா
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில், அனைத்து மண்டலங்களுக்கு இடையேயான ஆடவர் விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது. நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.