sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

/

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்


ADDED : ஜூலை 05, 2025 11:58 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நலம் நம் கையில்


ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், நலம் குறித்த யூகங்கள் மற்றும் அதன் உண்மைகள் குறித்து விளக்கமளிக்கும் நலந்தானா, 'நலம் நம் கையில்' நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம், கிக்கானி பள்ளியில் நடக்கிறது. மூத்த சித்த மருத்துவர் சிவராமன் தலைமை வகிக்கிறார். மாலை, 6:00 மணிக்கு நடக்கும் விழாவில், இதயம், புற்றுநோய் குறித்து மருத்துவர்கள் உரையாற்றுகின்றனர்.

ஆசாடி ஏகாதசி


சுந்தராபுரம், எல்.ஐ.சி.,காலனி, பாண்டுரங்க ருக்மணி தியான மந்திர் கோவிலில், ஆசாடி ஏகாதசி நடக்கிறது. பாண்டுரங்க ருக்மணி தாயாருக்கு விசேச அலங்காரமும், நாமசங்கீர்த்தனமும் மாலை, 5:00 மணி முதல் இரவு, 7:30 மணி வரை நடக்கிறது.

மாதாந்திர பஜன்


ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சார்பில் மாதாந்திர பஜன் நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ மாருதி கானா சபாவில், மாலை, 5:15 மணிக்கு நடக்கிறது. பஜனை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரசாதம் வழங்கப்படும்.

அபிஷேக விழா


கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் சார்பில், 645வது மாதாந்திர அபிஷேக விழா நடக்கிறது. பேரூர், பட்டீசுவரர் கோவிலில் உள்ள, பாலதண்டாயுதபாணி சன்னதியில், காலை, 9:30 மணிக்கு அபிஷேக விழா நடக்கிறது.

கீதா உபதேசம்


ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதா உபதேசம் நடக்கிறது. டாடாபாத், மூன்றாவது வீதியில், மாலை, 5:00 மணிக்கு, கீதை உபதேச நிகழ்ச்சி நடக்கிறது.

பரிசளிப்பு விழா


நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா இன்று, மாநகராட்சி கலையரங்கத்தில், காலை, 10:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பாக தேர்வு பெற்ற குழந்தைகள் கவுரவிக்கப்படுகின்றனர்.

இசைக்கருவிகள் கண்காட்சி


'போக் டான்ஸ் ஸ்டூடியா' சார்பில், 70க்கும் மேற்பட்ட நாட்டார் இசைக் கருவிகள் கண்காட்சி நடக்கிறது. சிந்தாமணி பேருந்து நிறுத்தம், மருவரசி வளாகம் இரண்டாவது தளத்தில், காலை, 9:30 மணிக்கு துடும்பாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.

அமைதியின் அனுபவம்


தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.

பிரத்யங்கிரா நிகும்பலா பூஜை


ஸ்ரீ விஜய தட்ஷிண மஹாயோனி பீடம், ஸ்ரீ மாதா யந்த்ராலயா, மஹா மேரு ஸ்ரீ தசமஹா வித்யா ஆலயம் சார்பில், பிரத்யங்கிரா நிகும்பலா பூஜை நடக்கிறது. புதுப்பாளையம், தீனம்பாளையம், மேற்கு சித்திரைச்சாவடி ரோடு, ஸ்வாமிஸ் ஆதித்யா பகுதியில், காலை, 6:00 மணி முதல் பூஜைகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us